Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: புனேவை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் அசத்தல் வெற்றி!

புனே: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

10-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - ரைசிங் புனே ஜெயன்ட் அணிகள் மோதின.

IPL 2017: Match 9: Sanju Samson's maiden ton powers Delhi to 205/4 against Pune

புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வென்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து புனே அணி 206 ரன்கள் என்ற இமால இலக்கை நோக்கி களமிறங்கிய புனே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் சார்பாக மயான்க் அகர்வால் அதிகபட்சமாக 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களை சேர்த்தார். மளமளவென விக்கெட்டுகளை இழந்து வந்த புனே அணியில் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் புனே அணி 16 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்த போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து டெல்லி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, April 12, 2017, 0:10 [IST]
Other articles published on Apr 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+