Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா 100.. மும்பை இந்தியன்ஸ் புதிய டி20 சாதனை!

மும்பை: 100 டி 20 போட்டிகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி.

2 முறை ஐபிஎல் சாம்பியனாக முடி சூடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இன்னொரு சாதனையை தன் வசமாக்கியுள்ளது. 100 டி20 போட்டிகளை வென்று அது புதிய வரலாறு படைத்துள்ளது.

இதுவரை உலக அளவில் எந்த அணியும் 100 டி20 போட்டிகளை வென்றதில்லை. நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி தனது 100வது வெற்றியைப் பெற்றது மும்பை இந்தின்ஸ்.

2008 முதல்

2008 முதல்

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறது மும்பை. ஆரம்பத்தில் இதன் ஆட்டம் சரியாக இல்லை. அதன் பிறகு இது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

முதல் வெற்றி கொல்கத்தாவுடன்

முதல் வெற்றி கொல்கத்தாவுடன்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் வெற்றி 2008ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக கிடைத்ததாகும். அதன் 100வது வெற்றியும் கொல்கத்தாவுக்கு எதிராகவே கிடைத்துள்ளது சுவாரஸ்யமான ஒற்றுமையாகும்.

3 சாம்பியன் பட்டங்கள்

3 சாம்பியன் பட்டங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி 2011ல் நடந்த சாம்பின்ஸ் லீக் டி20 தொடரை வென்றுள்ளது. 2013ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கொல்கத்தா

கொல்கத்தா

மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை 20 முறை மோதியுள்ளனர். இதில் 15 முறை மும்பையே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 14, 2017, 14:53 [IST]
Other articles published on May 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+