Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி, ஆள விடுங்க.. இந்த ஐபிஎல் சீசனையே மறக்க விரும்புகிறேன்.. கோஹ்லி கதறல்

டெல்லி: இந்த ஐபிஎல் சீசனை மறக்க முயல்வதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

10வது ஐபிஎல் சீசனான நடப்பு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுமோசமாக விளையாடியது. என்டர்டெயினிங் செய்யும் அணி என ரசிகர்களால் புகழப்பட்ட அந்த அணி, 14 போட்டிகளில் பங்கேற்று 10 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.

நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

 பெரிய ஆட்கள்

பெரிய ஆட்கள்

கோஹ்லி, டிவில்லியர்ஸ், கெய்ல் என பெரிய பேட்டிங் பட்டாளம் இருந்தபோதிலும், பெங்களூர் அணி சொதப்பியதால், ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். விராட் கோஹ்லியின் பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அவர் இந்தியாவுக்காக ஆடும்போது ஃபார்மில் வருவாரா என்ற அச்சமும் ரசிகர்களிடம் இருந்தது.

 கோஹ்லி அருமை

கோஹ்லி அருமை

இந்த நிலையில், டெல்லி அணியை வீழ்த்திய நேற்றைய போட்டியில் கோஹ்லி அரை சதம் கடந்தது, பெங்களூர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய ரசிகர்களுக்கே புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

 கோஹ்லி பேச்சு

கோஹ்லி பேச்சு

போட்டிக்கு பிறகு கோஹ்லி கூறுகையில், 10வது ஐபிஎல் சீசனை மற்கக நினைக்கிறோம். அருமையான வாய்ப்பு இருந்தும், தவறுகளை செய்து இப்படி ஒரு நிலைக்கு அணி போய்விட்டது.

 இப்போதான் சிறப்பா ஆடுறாங்க

இப்போதான் சிறப்பா ஆடுறாங்க

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி வீரர்கள் சிறப்பான பாதைக்கு திரும்பினர். அடுத்த வருட ஐபிஎல் சீசனின்போது இப்போது இந்த அணியிலுள்ள சில வீரர்களை அப்படியே வைத்துக்கொள்ள விரும்புகிறேன். ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஆவேஸ் கான் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டர்.

 சிறந்த பவுலர்கள்

சிறந்த பவுலர்கள்

சர்வதேச பவுலர்களே திணறும் இதுபோன்ற ஒரு பிட்சில் ஆவேஸ் கான் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. ஹர்ஷல் பட்டேலும், ஆவேஸ் கானும் முழு ஈடுபாட்டோடு ஆடினர். இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Monday, May 15, 2017, 10:45 [IST]
Other articles published on May 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+