ஐபிஎல்லின் நீளமான சிக்ஸ் இதுதான் மக்களே.. ஒரே அடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ்!
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் அணி டெல்லிக்கு எதிராக நேற்று விளையாடிய போட்டியில் ஏ பி டி வில்லியர்ஸ் அடித்த சிக்ஸ் ஒன்று மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
நேற்று பெங்களூரில் பெங்களூர் அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் பெங்களூர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. அதில் ஏ பி டி வில்லியர்ஸ் அடித்த சிக்ஸ் ஒன்று வீரர்கள், ரசிகர்கள் எல்லோரையும் வாய் பிள்ளை வைத்துள்ளது.

வில்லியர்ஸ் பேட்டிங்
இதில் டி வில்லியர்ஸ் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது. 39 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸ் அடக்கம். அணியை மிக எளிதாக வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அவரது இந்த அதிரடி காரணமாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வாவ் சிக்ஸ்
இதில் டி வில்லியர்ஸ் 26 ரன்கள் இருக்கும் போதுதான் அந்த சிக்ஸ் அடித்தார். திவேதியா பந்தில், வில்லியர்ஸ் சிக்ஸ் அடித்தார். அந்த சிக்ஸ் சரியாக மேலே இருந்த கட்டிடத்தில் பட்டு மீண்டும் தரையில் விழுந்தது. இந்த சிக்ஸ் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மிகவும் நீளமானது
இந்த ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட மிகவும் நீளமான சிக்ஸ் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த சிக்ஸ் 106 மீட்டர் தூரம் சென்றது. இரண்டாவது இடத்தில் ஆண்ட்ரு ரசல் இருக்கிறார். இவர் 105 மீட்டர் தூரம் சென்றது. மூன்றாவது இடத்தில் கிறிஸ் லைன் இருக்கிறார். அவர் அடித்த சிக்ஸ் 103 மீட்டர் தூரம் சென்றது.
ஒரே வழி
இவர் ''டி வில்லியர்ஸை சிக்ஸ் அடிப்பதில் இருந்து தடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக வைட் பந்து மட்டுமே வீச வேண்டும் என்று இப்போது பவுலர்களுக்கு கூட தெரிந்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications