Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறந்த வீடாவே இருந்தாலும் சொல்லி அடித்த ராயுடு.. புகுந்த வீடு சென்னை ஹேப்பி அண்ணாச்சி!

Recommended Video

அதிரடியால் அசத்திய அம்பதி ராயுடு

ஹைதராபாத் : ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் அம்பதி மிகவும் அதிரடியாக ஆடி இருக்கிறார். நெட்டிசன்கள் இவரை வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. 2வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்து வருகிறது.

சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சூப்பர் அம்பதி ராயுடு

சூப்பர் அம்பதி ராயுடு

சென்னை அணி இதில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆனால் சென்னை அணி ரெய்னா, மற்றும் அம்பதி ராயுடு ஜோடியால் மீண்டு வந்தது. அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஒவ்வொரு போட்டி

ஒவ்வொரு போட்டி

ராயுடு இந்த போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ஆந்திராவைச் சேர்ந்த அவருக்கு ஹைதராபாத் நல்ல பரிச்சயம் என்பதால், அவர் மிகவும் எளிதாக ஆடினார். அவர் அந்த மைதானத்தில்தான் பல முறை கிரிக்கெட் பயிற்சி எடுத்தவர். இதனால் ஹைதராபாத் அணியின் கஷ்டமான பவுலிங்கை எளிதாக தெறிக்க விட்டார்.

சொந்த ஊர் பையன்

சென்னை பையன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கேப்டனாக தோற்கடித்த போது, சென்னை ரசிகர்கள் அவரிடம் செல்லமாக கோபம் கொண்டனர். அதை இப்போது ஹைதராபாத் ரசிகர்கள், அம்பதி ராயுடு மீதும் கொண்டு இருக்கிறார்கள். சென்னை அணிக்கு சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் இவர் என்றும் பாராட்டியும் இருக்கிறார்கள்.

புதிய பெயர்

சென்னை அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது. டோணிக்கு தல, ரெய்னாவிற்கு சின்ன தல என்று அழைத்து வருகிறார்கள். இப்போது அம்பதி ராயுடுவிற்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள். ஒரே போட்டியில் அவர் அணியின் சின்ன தளபதி ஆகியுள்ளார். பெரிய தளபதி வேற யார்.. நம்ம பிராவோதான்!

Story first published: Monday, April 23, 2018, 9:43 [IST]
Other articles published on Apr 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+