Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐந்து விக்கெட் எடுத்து பேட்ஸ்மேன்களை கதறவிட்ட அங்கீத் ராஜ்பூட்.. யார் இந்த பஞ்சாப் வீரர்!

Recommended Video

ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து ராஜ்புத் சாதனை

பஞ்சாப்: பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அங்கீத் ராஜ்பூட் ஐந்து விக்கெட் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் பரபரப்பாக நடந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஹைதராபாத் 6 விக்கெட்டிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்பின் ஆடிய பஞ்சாப் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத்தில் பந்து வீச்சு இதில் அபாரமாக இருந்தது.

புதிய சாதனை

புதிய சாதனை

அங்கீத் ராஜ்பூட் மொத்தம் 4 ஓவர் போட்டு 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மொத்தமாக இவர் ஐந்து விக்கெட் எடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் ஐந்து விக்கெட் எடுத்த முதல் நபர் இவர்தான் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஆனாலும் பஞ்சாப் அணி கடைசியில் ஹைதராபாத் பவுலிங்கில் சுருண்டது.

யார் விக்கெட்டை எடுத்தார்

யார் விக்கெட்டை எடுத்தார்

இதில் அங்கீத் முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். ஷிகர்தவான், சாகா, கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே என்று வரிசையாக முதல் நான்கு வீரர்களின் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் கடைசியில் முகமது நபி விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

யார் இவர்

யார் இவர்

பஞ்சாப் அணிக்காக இவர் 3 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்டார். அப்போதே இவர் மீது பலர் கவனம் செலுத்தினார்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர். இவருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. வலது கை மிதவேகப்பந்து வீச்சாளர். ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

ஆனாலும் மோசம்

இந்த போட்டியில் அங்கீத், ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்துவிட்டு, மோசமாக கத்தினார். பின் ஷிகர் தாவணி நோக்கி தகாத வார்த்தைகளில் திட்டி இருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டில் இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர் பேசியுள்ளார்.

Story first published: Friday, April 27, 2018, 14:46 [IST]
Other articles published on Apr 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+