Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங்கில் கலக்கிய கொல்கத்தா... 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெற்றி

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் பெங்களூர், கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடந்தது. இதில் கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை 5 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 5 வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணிக்கும் 3 வெற்றிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் பெங்களுர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

IPL 2018: Bengaluru is facing the strongest Kolkata

கொல்கத்தா அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அந்த அணியில் மிகவும் நல்ல பேட்டிங் ஆர்டரும் உள்ளது. அதேசமயம் பெங்களூர் அணியும் நல்ல பேட்டிங் ஆர்டருடன் இருக்கிறது.

இந்த போட்டியில் பெங்களூர் அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏபிடி வில்லயர்ஸ் உடல்நிலை சரியில்லாததால் அணியில் இல்லை. அவருக் பதில் டிம் சவுதி வந்துள்ளார். அதே போல் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் இன்னொரு தமிழக வீரர் முருகன் அஸ்வின் வந்துள்ளார்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்றது.டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவு செய்தது.

ஓப்பனர்கள் அவுட் ஆனாலும் கோஹ்லி அதிரடியாக ஆடினார். கோஹ் அதிரடியாக 68 ரன்கள் எடுத்தார். முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவருக்கு 4 விக்கெடிற்கு 175 ரன்கள் எடுத்தது.கொல்கத்தாவிற்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூர்.

அதன்பின் கொல்கத்தா அதிரடியாக ஆடியது. நரேன், லின், உத்தப்பா, ராணா என எல்லோரும் அதிரடி காட்டினார்கள். இதனால் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா எளிதாக 19.1 ஓவரில் 5 விக்கெடிற்கு 175 ரன்கள் எடுத்தது

Story first published: Monday, April 30, 2018, 0:13 [IST]
Other articles published on Apr 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+