Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசான அணியா?.. எங்க திரும்ப சொல்லுங்க.. ஒரே போட்டியில் சிஎஸ்கேவின் வியக்க வைக்கும் 5 சாதனை!

சென்னை: நேற்று சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் நடந்த போட்டியில் வென்றதன் மூலம், சென்னை பல புதிய சாதனைகளை செய்துள்ளது. இரண்டு வருடத்திற்கு பின் திரும்ப வந்திருக்கும் சென்னை பல சாதனைகளை முறியடித்து உள்ளது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து ஆடிய டெல்லி கடைசி வரை போராடி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 198 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி மட்டும் இல்லாமல் சென்னையில் உள்ள வீரர்களும் புதிய சாதனை படைத்து இருக்கிறார்கள். வயசான அணி என்று சென்னையை கிண்டல் செய்தவர்களுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளார்கள்.

அதிக 200+ ரன்கள்

அதிக 200+ ரன்கள்

சென்னை அணி நேற்று 211 ரன்கள் எடுத்தது. இது சென்னை அடிக்கும் 16 வது 200+ ரன் ஆகும். ஐபிஎல் போட்டியில் அதிக முறை 200க்கும் அதிகமான ரன்கள் எடுத்தது சென்னை மட்டுமே. இதில் பெங்களூர் அணி 200க்கு அதிகமான ரன்களை 14 முறை எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் சென்னை அணிக்கு 200க்கும் அதிகமாக இலக்கு வைத்தால் அதில் 90 சதவிகித போட்டிகளில் வெற்றிபெற்று இருக்கிறது.

அதிக வெற்றி

அதிக வெற்றி

சென்னை அணி ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டாவது அணியாக மாறியுள்ளது. சென்னை மொத்தமாக 100 போட்டிகளை வென்றுள்ளது. மும்பை 105 போட்டிகளை வென்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டு சீசன்களில் விளையாடாமல் சென்னை அணி இப்படி ஒரு சாதனை செய்துள்ளது.

தோனி சாதனை

தோனி சாதனை

நேற்றைய போட்டியில் மொத்தம் 22 பந்துகள் பிடித்த தோனி 5 சிக்ஸ் அடித்தார். அதேபோல் 2 பவுண்டரி அடித்தார். மொத்தமாக 51 ரன்கள் எடுத்து டெல்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தார். இதன் மூலம் கேப்டனாக தோனி 3557 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் ஒருவர் கேப்டனாக எடுத்த அதிக ரன் இதுதான். இரண்டாவதாக கம்பீர் 3518 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

அதிகம்

அதிகம்

புனே மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். சென்னை அணி நேற்று 211 ரன்கள் எடுத்தது. இதற்கு முன் புனே மைதானத்தில் இவ்வளவு ரன்கள் எந்த அணியும் எடுத்தது இல்லை. இதே புனே மைதானத்தில் டெல்லி அணி அப்போது இருந்த புனே அணிக்கு எதிராக 205 ரன்கள் எடுத்து இருந்ததே பெரிய ஸ்கோராக இருந்தது.

இன்னொரு சாதனை

இன்னொரு சாதனை

இதில் தோனி இன்னொரு சாதனை செய்துள்ளார். நேற்று 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது இவரது இரண்டாவது வேகமான அரைசதம் ஆகும். இதற்கு முன்பு இவர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 16 பந்துகளில் 2013ல் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 1, 2018, 14:15 [IST]
Other articles published on May 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+