மேட்ச் வின் பண்ணியாச்சு.. ஆனாலும்.. சிஎஸ்கே நேற்று செய்த மோசமான சாதனை என்ன தெரியுமா?
Recommended Video

ஹைதராபாத்: நேற்று சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றாலும், முதல் 10 ஓவரில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது. சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் த்ரில்லாக 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. நேற்று ஹைதராபாத் பவுலிங் காரணமாக போட்டி மிக மிக விறுவிறுப்பாக இருந்தது.

சென்னை அணி மோசம்
இந்த போட்டியில் சென்னை தொடக்கத்தில் மிகவும் மோசமாக ஆடியது. தொடக்கத்திலேயே சென்னை அணி வாட்சன், டு பிளசிஸ் ஆகியோரை இழந்தது. வாட்சன் 9 ரன்களுக்கும், டு பிளசிஸ் 11 ரன்களுக்கும் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய ராயுடு, ரெய்னாவும் மிகவும் நிதானமாக ஆடினார்கள். வாய்ப்பளிக்கப்பட்ட டு பிளசிஸ் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சென்னை அணி மீண்டு வந்தது
ஆனால் அதன்பின் சென்னை அணி ரெய்னா, அம்பதி ராயுடு ஜோடியால் மீண்டு வந்தது. அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னா அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம்.

மோசமான சாதனை
இதில் சென்னை அணி மிகவும் மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளது. அதன்படி சென்னை முதல் பத்து ஓவரில் 54 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இரண்டு விக்கெட்டை வேறு இழந்தது. இதனால் இந்த ஐபிஎல் 2018 தொடரில், முதல் 10 ஓவருக்கு அடிக்கப்பட்ட மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான். வேறு எந்த அணியும் முதல் பத்து ஓவரில், இந்த சீசனில் இவ்வளவு குறைவான ஸ்கோர் அடிக்கவில்லை.

ஆனாலும்
சென்னை அணி முதல் பத்து ஓவர்களில் இவ்வளவு மோசமாக விளையாடியும் கூட அடுத்த பத்து ஓவர்களில் அதிரடி காட்டியது. யாரும் நினைக்க முடியாத அளவிற்கு வேகம் எடுத்தது. அம்பதி ராயுடு, ரெய்னா அதிரடியால் பெரிய இலக்கை நிர்ணயித்து வெற்றியும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications