Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறுவயதில் சாலையில் அமர்ந்து நிலக்கடலை விற்றேன்.. கடந்த காலம் பற்றி மனம்திறந்த சிஎஸ்கே வீரர்!

Recommended Video

சிறு வயதில் நிலக்கடலை விற்ற சென்னை அணியின் வீரர்- வீடியோ

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கிசனி கிடி சிறுவயதில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.

சென்னை அணியில் புதிய கொண்டாட்டமாக லுங்கிசனிகிடி உருவாகி இருக்கிறார். சென்னை மக்களிடையே இவர் வைரல் ஆகியுள்ளார்.

லுங்கிசனி கிடி சென்னை அணியால் 50 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது.

தகவல்

தகவல்

இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் சென்னை அணிக்கு வருவது குறித்து ஏற்கனவே அரசல் புரசலான தகவல்கள் இருந்தது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற போது இவர் விளையாடுவது பிடித்து, டோணி இவரை அணியில் எடுக்க சொல்லி இருக்கிறார். அதன்காரணமாகவே அவருக்கு இந்த திடீர் வாய்ப்பு கிடைத்தது.

 அணியில் இல்லை

அணியில் இல்லை

ஆனால் அவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லோரும் சரியாக பந்து வீசுவதால் இப்போது லுங்கியின் தேவை குறைந்து உள்ளது. தீபக் சாஹர் அணியில் விளையாடாத பட்சத்தில் லுங்கி அணியில் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பிளே ஆப் சுற்றில் விளையாடுவது உறுதியான பின் லுங்கி அணியில் எடுக்கப்படலாம்.

 நிலக்கடலை

நிலக்கடலை

இந்த நிலையில் இவர் தன்னுடைய சிறு வயதில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதன்படி சின்ன வயதில் தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து சாலை ஓரத்தில் நிலக்கடலை விற்றதாக கூறியுள்ளார். அதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றுள்ளார். அந்த பணத்தை அம்மாவிடம் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

 மரணம்

மரணம்

அவருடைய தந்தை சென்ற வாரம் மரணம் அடைந்துவிட்டார். இதற்காக லுங்கி தற்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் இன்னும் ஒரு வாரத்திற்கு பின் வந்து சென்னை அணியில் இணைவார். ஆனால் விளையாடும் அணியில் இருப்பது சந்தேகம்தான் .

Story first published: Wednesday, April 18, 2018, 15:48 [IST]
Other articles published on Apr 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+