Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலில் பேடுடன் ஓடி தோனி புதிய சாதனை.. பவுண்டரியை தடுக்க தல எவ்வளவு கிமீ வேகத்தில் ஓடினார் தெரியுமா?

Recommended Video

தோனி தடுத்து நிறுத்திய பவுண்டரி

பெங்களூர்: பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதன்படி தற்போது இவர் எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.

வேகமாக ஓடினார்

இந்த போட்டியில் தொடக்கத்தில் தோனி வேகமாக ஓடிய பீல்டிங் ஒன்று வைரல் ஆனது. டி காக் அடித்து பின் பக்கம் சென்ற பந்தை தடுப்பதற்காக அவர் வேகமாக ஓடினார். காலில் பேட் கட்டிக் கொண்டு, கிளவுஸை தூக்கி போட்டுவிட்டு அவர் வேகமாக ஓடி பவுண்டரியை தடுப்பார்.

சூப்பர் வைரல்

அவரின் இந்த பீல்டிங் மிகவும் வைரல் ஆனது. பலரும் இவரை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள். இவர் ''தோனிக்கு வயதாகிவிட்டது என்று கூறி இப்போதும் பலர் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்'' என்றுள்ளார்.

எவ்வளவு வேகம்

எவ்வளவு வேகம்

இந்த பந்தை தடுப்பதற்காக இவர் மொத்தம் 28 மீட்டர் ஓடி இருக்கிறார். இதை இவர் மொத்தம் 6.12 நொடிகளில் கடந்து இருக்கிறார். இந்த நேரம் பந்தை தடுப்பதையும் சேர்த்து ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவர் 22 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி இருக்கிறார், என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கணித்து இருக்கிறார்கள். காலில் பேட் கட்டிக்கொண்டு இப்படி ஓடுவது மிகவும் கடினம் ஆகும்.

உசேன் போல்ட்

உசேன் போல்ட்

  • ஏற்கனவே உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோணி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருந்தது. பொதுவாக பேட்டிங் செய்யும் போது டோணியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். உசேன் போல்ட் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். இது டோணியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.
Story first published: Friday, April 27, 2018, 13:13 [IST]
Other articles published on Apr 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+