அனுமதி அளிக்காத ஹோட்டல் நிர்வாகம்.. பார்க்கிங்கில் அம்பதி ராயுடுவுடன் பிரியாணி சாப்பிட்ட டோணி
Recommended Video

சென்னை: சென்னை அணியில் தற்போது விளையாடும் அம்பதி ராயுடு, கொண்டு வந்த பிரியாணியை சாப்பிடுவதற்காக டோணி அவர் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ல் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அப்போது அம்பதி ராயுடு சென்னை அணியில் இல்லை. ஆனாலும் டோணியுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார்.
சென்ற வருடம் டோணிக்கு எதிராக புனே அணி உரிமையாளர் பேசிய போது கூட ராயுடு கோபமாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது டோணிக்கும் அம்பதி ராயுடுவிற்கு இடையில் நடந்த பழைய சுவாரசியமான சம்பவம் ஒன்று வைரல் ஆகியுள்ளது.

பிரியாணி வாங்கி வந்தார்
அப்போது ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள சென்னை அணி அங்கு சென்றுள்ளது. அவர்களை பார்க்க ஹைதராபாத்தில் இருந்து, அம்பதி ராயுடு பிரியாணி வாங்கி சென்றுள்ளார். டோணிக்கு ஹைதராபாத் பிரியாணி பிடிக்கும் என்பதால், வீரர்கள் எல்லோருக்கும் மொத்தமாக பிரியாணி வாங்கி அந்த ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்.

உள்ளே அனுமதிக்கவில்லை
ஆனால் அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் வெளியே இருந்து உணவு கொண்டு வர அனுமதி இல்லை. இதனால் அம்பதி ராயுடு கொண்டு வந்த உணவை ஹோட்டல் நிர்வாகம் உள்ளே அனுமதிக்காமல் இருந்துள்ளது. அவர் ஹோட்டல் நிர்வாகிகளுடன் சண்டையிட்ட பின்பும் கூட உள்ளே அனுமதிக்காமல் இருந்துள்ளனர். டோணி வந்து பேசிய பின்பும் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

வெளியே சென்று சாப்பிட்டார்கள்
இதனால் ஹோட்டலில் இருந்த எல்லா வீரர்களும் வெளியேறி இருக்கிறார்கள். வெளியே சென்று ஹோட்டல் பார்க்கிங்கில் வைத்து பிரியாணி சாப்பிட்டு இருக்கிறார்கள். அப்போதில் இருந்து, டோணியுடன் அம்பதி ராயுடு மிகவும் நெருக்கமான நண்பராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணியில் வாய்ப்பு
இந்த நிலையில்தான் சென்ற ஐபில் போட்டியில், மும்பை அணிக்காக விளையாடிய அம்பதி ராயுடுவிற்கு இந்த ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அவர் மீது இருந்த புகார்களை எல்லாம் சரிசெய்யும் வகையில் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார், முக்கியமாக ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.


Click it and Unblock the Notifications