Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'எம்ஐவி'ன்னா என்ன பாஸ்? வீடியோ வெளியிட்டு சிஎஸ்கே ரசிகர்களை குழப்பிய தோனியின் மகள்!

Recommended Video

ரசிகர்களை குழப்பிய டோனியின் மகளின் புதிய ஃபிரண்ட்

சென்னை: தோனியின் மகள் ஷிவா வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ காரணமாக ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

தற்போது சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் மிகவும் வலுவான அணி என்பதால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விளையாடி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. ஹைதராபாத் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.

வைரல் வீடியோ

இந்த நிலையில் இன்று போட்டிக்கு முன் சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகள் ஷிவாவின் ஜாலி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸின் 'சிங்கம்' லோகோவில் உட்கார்ந்து ஷிவா விளையாடும் வீடியோ சென்னை அணியின் அதிகார்பூர்வ டிவிட்டர் பக்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் வைரலாகி உள்ளது.

என்ன அர்த்தம் பாஸ்

என்ன அர்த்தம் பாஸ்

இந்த நிலையில் அந்த வீடியோவில் ஷிவா, அந்த சிங்கத்திற்கு ஷிவா 'எம்ஐவி' என்று பெயர் வைத்துள்ளார். இந்த பெயர் காரணமாக ரசிகர்கள் பலர் குழம்பி இருக்கிறார்கள். எம்ஐவின்னா என்ன பாஸ் என்று எல்லோரும் இணையம் முழுக்க கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

என்ன அர்த்தம்

எம்ஐவி என்பதற்கு பலரும் ஒவ்வொரு விளக்கம் அளித்துள்ளனர். இவர் எம்ஐவி என்பதற்கு,'' மஹி இஸ் வின்டேஜ் '' என்று விளக்கம் அளித்துள்ளார்.

வைரல் பேபி ஷிவா

வைரல் பேபி ஷிவா

இந்த ஐபிஎல் தொடரில் யார் வைரல் ஆனார்களோ இல்லையோ ஷிவா அதிக அளவில் வைரல் ஆனார். ஒவ்வொரு போட்டிக்கு முன்னும் பின்னும் தோனி, ஷிவாவை வைத்து வெளியிடும் வீடியோ போட்டியின் வைரல் வீடியோவை விட அதிக அளவில் வைரலாகி உள்ளது. தற்போது இந்த வீடியோவும் இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

Story first published: Sunday, May 27, 2018, 20:06 [IST]
Other articles published on May 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+