Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் குழம்பிய பிராவோ.. 2 பந்திற்காக மொத்த திட்டத்தை மாற்றிய டோணி!

Recommended Video

கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி

ஹைதராபாத்: நேற்று சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு பந்திற்காக டோணி அவர் வைத்து இருந்த மொத்த திட்டங்களையும் மாற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல் பிராவோ மிகவும் மோசமான மனநிலையில் அப்போது இருந்தார் என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது. சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் த்ரில்லாக 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் தற்போது சென்னை முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி 4 வெற்றியுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் இலக்கு

சூப்பர் இலக்கு

நேற்றைய போட்டி மிகவும் த்ரில்லாக சென்றது. சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இந்த நிலையில் கடைசி பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்று போட்டி மிகவும் விறுவிறுப்பாக ஆனது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

கடைசி ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் மொத்தம் 19 ரன்கள் தேவை. ஆப்கான் புலி ரஷீத் கான் பந்துகளை சிக்ஸ், பவுண்டரி என்று பறக்கவிட்டுக் கொண்டு இருந்தார். மிகவும் எளிதாக முடிய வேண்டிய போட்டி த்ரில்லாக சென்றது. இந்த நிலையில் கடைசி பந்தில் ஹைதராபாத் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. சென்னை அணியின் மொத்த நம்பிக்கையும் பிராவோ மீது சென்றது.

மனநிலை

மனநிலை

ஆனால் ரஷீத் கானின் அதிரடியை பார்த்து, பிராவோ கொஞ்சம் குழம்பி போய் இருக்கிறார். முக்கியமாக ஐந்தாவது பந்தில் பவுண்டரி சென்ற பின் இன்னும் குழப்பம் அடைந்து இருக்கிறார். டோணி, ''பிராவோ மிகவும் மோசமான மனநிலையில் அப்போது இருந்தார்'' என்று பேட்டியின் போது கூறியுள்ளார். இதன் காரணமாகவே ''கடைசி பந்திற்கு முன் பிராவோவிடம் சென்று பேசினேன்'' என்றுள்ளார்.

என்ன அறிவுரை

என்ன அறிவுரை

கடைசி நேரத்தில் டோணி அவருக்கு நிறைய அறிவுரை வழங்கி இருக்கிறார். பிராவோ, டோணி இருவரும் வேறு ஒரு திட்டம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் என்று வந்தவுடன் மொத்தமாக அந்த திட்டத்தை மாற்றினோம் என்று டோணி கூறியுள்ளார். சமயங்களில், பிராவோ போன்ற மிக சிறப்பான பவுலர்கள் கூட தடுமாறுவார்கள், அப்படி எதுவும் நடக்க கூடாது என்றுதான், நான் சென்று திட்டத்தை மாற்றினேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, April 23, 2018, 10:41 [IST]
Other articles published on Apr 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+