22 பந்துகள் .. 51 ரன்கள்.. இவர் விண்டேஜ் தோனி இல்லை பாஸ்.. வின் பண்ணுற தோனி!
டெல்லி: நேற்று சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் நடந்த போட்டியில் தோனி மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தோனியின் ஐபிஎல் வரலாற்றில் இந்த போட்டி கண்டிப்பாக முக்கியமான ஒன்றாக பேசப்படும் .
நேற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து ஆடிய டெல்லி கடைசி வரை போராடி 20 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 198 ரன்கள் எடுத்தது.
நேற்று தோனி 108 மீட்டரில் அடித்த சிக்ஸ்தான் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது நீளமான சிக்ஸ் ஆகும். அவர் மீது விமர்சனம் வைக்கும் எல்லோருக்கும் வரிசையாக தன்னுடைய போட்டி மூலம் இவர் பதில் அளித்து வருகிறார்.

சூப்பர் ஆட்டம்
நேற்றைய போட்டியில் மொத்தம் 22 பந்துகள் பிடித்த தோனி 5 சிக்ஸ் அடித்தார். அதேபோல் 2 பவுண்டரி அடித்தார். மொத்தமாக 51 ரன்கள் எடுத்து டெல்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 231.82. இந்த ஐபிஎல் தொடரில் தோனி ஆடிய மிக முக்கியமான போட்டிகளில் இதும் ஒன்றாகும். பேட்டிங் ஆர்டரில் எந்த பொஷிஷனில் ஆடினாலும், கெத்து காட்டுவேன் என்று தற்போது அவர் நிரூபித்துள்ளார்.

ஸ்டைலை மாற்றிவிட்டார்
நேற்றைய போட்டியிலும் சரி, பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியிலும் சரி. தோனி தன்னுடைய ஸ்டைலை மொத்தமாக மாற்றிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். முன்பெல்லாம் களத்தில் இறங்கி, சூழ்நிலையை புரிந்து கொண்டு பின்புதான் அதிரடி காட்டுவார். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. அதிகபட்சம் ஐந்து பந்துகளில் கள நிலவரத்தை புரிந்து கொண்டு வேகமாக ஆட ஆரம்பித்து விடுகிறார். நேற்று முதல் 7 பந்துகளில் 11 ரன் எடுத்திருந்த தோனி மீதம் உள்ள 13 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களுக்கு போட்டி
தற்போது இளம் வீரர்கள் எல்லோருக்கும் மிக சிறந்த போட்டியாக தோனி இருக்கிறார். ஐபிஎல் தொடக்கத்தில் கொஞ்சம் பார்ம் இல்லாமல் இருந்த தோனி தற்போது மீண்டும் பழைய தலயாக மாறியுள்ளார். இரண்டு போட்டிகளில் 70 ரன்களுக்கு மேல், நேற்றைய போட்டியில் அரை சதம் என்று மிகவும் நல்ல பார்மில் உள்ளார். சஞ்சு சாம்சன், கோஹ்லி, ஏபிடி, ரிஷாத் பேண்ட் என்று இளம் வீரர்களுக்கு போட்டியாக தோனி விளையாடி வருகிறார்.

அதிக ரன் அடித்த வீரர்கள்
அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் தற்போது தோனி 5 வது இடத்தில் இருக்கிறார். இவர் சரியாக பார்மில் இல்லை என்று கிண்டல் செய்தவர்களுக்கு எல்லாம், கடந்த போட்டிகளின் மூலம் பதில் அளித்து வருகிறார். முக்கியமாக இவரை எப்படி வீழ்த்தலாம் என்று நினைத்தவர்கள் கூட நேற்று அடித்த ஷாட்களை பார்த்து வியந்து போய் இருக்கிறார்கள். 8 போட்டி விளையாடி 286 ரன்களுடன் தோனி தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications