களத்திலும் சூப்பர்.. களத்திற்கு வெளியேவும் சூப்பர்.. செல்ல மகளுடன் தோனியின் குறும்பு வீடியோ
Recommended Video

பெங்களூர்: பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை வெற்றிபெற்ற பின் தோனி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். கிரிக்கெட் பற்றி நினைக்காமல், அவர் தன் மகளுடன் நேரம் செலவிடும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.
சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.
இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.
அப்பா தோனி
இந்த போட்டிக்கு பின் தோனி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் போட்டி முடிந்து நன்றாக தூங்கிவிட்டேன். மீண்டும் அப்பாவின் அன்றாட வேலைக்கு திரும்பி உள்ளேன் என்று அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில், டிவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் தோனி, அவரது செல்ல மகள் ஜிவாவிற்கு தலைமுடியை ஹீட்டர் போட்டு காய வைக்கிறார். ஜிவாவை சுற்றி சுற்றி தோனி அழகாக ஹீட்டர் போடும் வீடியோ மிகவும் வைரல் ஆகி உள்ளது. ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
எப்பவும் பெஸ்ட்
இவர் தோனி களத்திலும் சூப்பர், களத்திற்கு வெளியேவும் சூப்பர் என்று இந்த வீடியோவை பார்த்து பாராட்டி இருக்கிறார்.
நல்ல டிவிட்
இவர் ''இன்று நான் பார்த்த மிகவும் அழகான டிவிட் இதுதான்'' என்று இந்த வீடியோவின் ஷேர் ஒன்றில் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications