Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து வெற்றி.. கீப்பிங்.. பேட்டிங்.. கேப்டன்சி.. வாவ் சொல்ல வைக்கும் தினேஷ் கார்த்திக்!

Recommended Video

வாவ் சொல்ல வைக்கும் தினேஷ் கார்த்திக்!- வீடியோ

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் வரிசையாக வெற்றியை பதிவு செய்து இருக்கிறார். தன்னை ஒரு சிறந்த கேப்டனாகவும் நிரூபித்துள்ளார்.

இதனால் இவரை கொல்கத்தா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதே சமயம் தினேஷ் கார்த்திக்கின் வித்தியாசமான கேப்டன்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

மிகவும் அமைதியாக இருக்கும் இவர் மற்ற அணிகளை அசால்ட்டாக அச்சுறுத்தி வருகிறார். இதேபோல் இவர் செயல்பட்டால், ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு செல்வதில் சந்தேகம் இல்லை.

சூப்பர் கீப்பிங்

சூப்பர் கீப்பிங்

இந்த ஐபிஎல் தொடரில் தற்போது சிறந்து விளங்கும் கீப்பர் யார் என்றால் அது, தினேஷ் கார்த்திக்தான். 15 வருடத்திற்கும் அதிகமாக இவர் கற்றுக்கொண்ட கீப்பிங் டெக்னிக்குகளை இந்த தொடரில் பயன்படுத்தி வருகிறார். நேற்று ரஹானேவை வீழ்த்த இவர் பயன்படுத்திய கீப்பிங் முறை வாவ் போட வைத்தது. இது இவருக்கு இந்திய அணியில் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

சூப்பர் பேட்டிங்

சூப்பர் பேட்டிங்

இவர் எல்லா போட்டியிலும் மிகவும் நிதானமாக ஆடி அணியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வைக்கிறார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய இவர் 151 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 31 ரன்கள் எடுக்கிறார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அணியை வெற்றி பெற வைப்பதில் கில்லாடியாக இருக்கிறார்.

சூப்பர் கேப்டன்

சூப்பர் கேப்டன்

கேப்டனாக அவர் பல இடங்களில் வித்தியாசமான முடிவுகளை எடுக்கிறார். சரியான நேரத்தில் பார்ட் டைம் பவுலர் நிதீஷ் ராணாவிற்கு பவுலிங் செய்ய கொடுக்கிறார். பவுலரான சுனில் நரேனை மிகவும் சிறப்பாக பயன்படுத்துகிறார். இளம்வீரர்களை கடைசியில் இறங்க வைத்து வாய் பிளக்க வைக்கிறார். முக்கியமாக எந்த சூழ்நிலையிலும் முகத்தில் எந்த விதமான வேறுபாட்டையும் காட்டிக்கொள்வது இல்லை.

கேகேஆர்

கேகேஆர்

இந்த நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக கொல்கத்தா அணி ஐபிஎல் 2018 கோப்பையை வெல்வதில் சந்தேகம் இல்லை. இப்போதே 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் கொல்கத்தா அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது. இது அந்த அணியை மிக முக்கியமான அணியாக மாற்றியுள்ளது. இத்தனைக்கும் பின், மிக சிறிய வீரர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெற வைக்கும் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான திட்டமிடல் இருக்கிறது.

Story first published: Thursday, April 19, 2018, 11:48 [IST]
Other articles published on Apr 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+