Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளம்பரத்துல ஆடுன மாதிரி மேட்சில ஆடி இருக்கலாமே.. மும்பையை வறுத்தெடுக்கும் மீம்ஸ் தொகுப்பு!

Recommended Video

IPL 2018, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது

சென்னை: ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அடைந்த மோசமான தோல்வியை கலாய்த்து நெட்டிசன்கள் மீம் போட்டு வருகிறார்கள்.

இந்த ஐபிஎல் தொடரில் இப்போதுவரை மிகவும் மோசமாக ஆடி வரும் அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ்தான். இதுவரை நடந்த 6 போட்டிகளில் மும்பை 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறது.

முக்கியமாக நேற்று நடந்த ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில், 118 ரன்களை எடுக்க முடியாமல் வெறும் 87 ரன்களுக்கு அவுட் ஆனது. இதை கலாய்த்து தற்போது இணையத்தில் நிறைய மீம்கள் போடப்படுகிறது.

ஒரே ஆட்டம்

ஒரே ஆட்டம்

மொபைல் நெட்வொர்க் விளம்பரத்தில் மும்பை வீரர்கள் இப்படி நடனம் ஆடுவதுதான், இந்த வருடம் அந்த அணி செய்த ஒரே சரியான ஆட்டம் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

அட அப்பரசண்டிகளா

அட அப்பரசண்டிகளா

இவரும் அதை கலாய்த்து ''மேட்ச்ல ஆட சொன்னா, விளம்பரத்துல ஆடிக்கிட்டு இருக்கீங்களேடா அப்பரசண்டிகளா'' என்று கிண்டல் செய்துள்ளார்.

பாவம் பொல்லார்ட்

பாவம் பொல்லார்ட்

இந்த தொடரில் மும்பை அணிக்காக ஆடும் பொல்லார்ட் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியிலும் அவர் 9 ரன்களுக்கு அவுட் ஆனார். அதை கலாய்த்து இவர் மீம் போட்டு இருக்கிறார்.

மும்பை புள்ளி பட்டியல்

மும்பை புள்ளி பட்டியல்

ஐபிஎல் புள்ளி பட்டியலில் 8 பேரில் மும்பை அணி தற்போது 7 வது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பட்டியலை தலைகீழாக பார்த்து சந்தோசப்பட வேண்டியதுதான் என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.

இவங்களாம் இருக்கும் போது

இவங்களாம் இருக்கும் போது

இவர்களே உயிரோட இருக்கும் போது, நான் ஏன் சாகனும் என்ற பிரபலமான மீம் டெம்ப்லேட்டை மும்பை இந்தியன்ஸ் அணியை கலாய்க்கவும் பயன்படுத்தி உள்ளனர்.

மும்பை ரசிகர்கள்

மும்பை ரசிகர்கள்

மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மும்பை இந்தியன் அணியின் ரசிகர்களை இவர் கலாய்த்து இருக்கிறார்.

கடைசி ஓவர்

இவர் '' வாத்தியாரே, எப்பவும் லாஸ்ட் ஓவர்ல தானே தோப்போம். இந்த தடவ லாஸ்ட்க்கு முந்தின ஓவர்ல தோத்துருக்கோம்'' என்று கிண்டல் செய்துள்ளார்.

நம்ம கோஷ்டி மட்டும்தான்

நம்ம கோஷ்டி மட்டும்தான்

இவர் ''எல்லா பவுலர்ஸ்க்கும் பேட்டிங் சான்ஸ் கொடுத்து அழகு பாக்கற ஒரே கோஷ்டி நம்ம மேரி ஜான் கோஷ்டி தான்..!'' என்று மும்பையை கிண்டல் செய்துள்ளார்.

ஐபிஎல் தாயே

இவர் ''தாயே தாயே ஐபிஎல் தாயே.. எங்களுக்கு கப் தாயேன், தாயேன்'' என்று கிண்டல் செய்துள்ளார்.

பாண்டியா மோசம்

இவர் ''என்ன நடந்தாலும் மூஞ்சுல பயத்த மட்டும் காட்டாத பாண்டியா..!'' என்று நேற்று வெறும் மூன்று ரன்களில் டெஸ்ட் மேட்ச் போல மெதுவாக ஆடிய பாண்டியாவை கலாய்த்துள்ளார்.

Story first published: Wednesday, April 25, 2018, 11:36 [IST]
Other articles published on Apr 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+