Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மெர்சலாகுது.. ரஜினி, விஜய் ஸ்டைலில் கலக்கிய ரெய்னா, ஹர்பஜன்!

Recommended Video

தமிழில் டிவிட்டிய ஹர்பஜன் சிங், ரெய்னா

சென்னை: ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோரின் தமிழ் டிவிட்டுகள் மிகவும் வைரல் ஆகி உள்ளது. அவர்கள் வெளியிட்ட வீடியோவும் மிகவும் வைரல் ஆகியுள்ளது.

சென்னை அணி வீரர்கள் எல்லோரும் நேற்று ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று வந்ததில் இருந்து வீரர்கள் எல்லோரும் நிறைய போட்டோ வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த வகையில் நேற்று டோணி அடித்த சிக்ஸ் ஒன்று வைரல் ஆனது. தற்போது ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோரின் டிவிட்டுகள் வைரல் ஆகி உள்ளது.

ரெய்னா தமிழ்

ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில் ''என் இனிய நண்பன் முரளி விஜயுடன். சேர்ந்து கலக்குவோம் நண்பா'' என்று போட்டோ போட்டு உள்ளார்.

ஹர்பஜன் தமிழ்

ஹர்பஜன் சிங் தனது டிவிட்டரில் ''நான் வந்துட்டேன்னு சொல்லு. தமிழின் அன்பு உடன் பிறப்பெல்லாம் எப்புடி இருக்கீங்க மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காது கிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளையாட போறத நெனச்சாலே "மெர்சலாகுது". தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!. '' என்றுள்ளார்.

நாதஸ்வரம் வாசிக்கும் போட்டோ

அதேபோல் ரெய்னா, டோணி, ஜடேஜா தமிழ்நாடு கெட்டப்பில், நாதஸ்வரம் வாசிக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. இந்த போட்டோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

விளம்பர வீடியோ

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத்திற்காக நேற்று வீடியோ எடுக்கப்பட்டது. இதற்காக வீரர்கள் எல்லோரும் மிகவும் காமெடியாக ஆடியுள்ளனர்.

Story first published: Friday, March 23, 2018, 14:37 [IST]
Other articles published on Mar 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+