பார்த்தாயா எங்கள் ரத கஜ துரக பதாதிகளை.. புனே வரும் ரசிகர்களை பாராட்டிய புலவர் ஹர்பஜன்!
Recommended Video

கொல்கத்தா: அமெரிக்காவில் போட்டி நடத்தினாலும் விசில் போட சென்னை ரசிகர்கள் தயாராக இருப்பார்கள் என்று சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட் செய்துள்ளார்.
தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை சென்னைக்கும் ராஜஸ்தானிற்கும் போட்டி நடக்க உள்ளது. இதற்காக சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போட்டியை காண சென்னை ரசிகர்கள் புனேவிற்கு செல்ல இருக்கிறார்கள். அவர்கள் புனே செல்லும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

புனேவில் நடக்கும்
காவிரி பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் சென்னை அணி ஆடும் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது. புனே மைதானம் இனி சென்னை அணியின் சொந்த மைதானமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பல மைதானங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு கடைசியில் புனே மைதானம் தேர்வானது.
தீவிரமானவர்கள்
இந்த நிலையில் புனேவில் நாளை ராஜஸ்தானிற்கும் சென்னைக்கும் இடையில் போட்டி நடக்க உள்ளது. இதை பார்க்க சென்னையில் இருந்து ரசிகர்கள் செல்கிறார்கள். இதற்காக இன்று ஒரு ரயிலில் முக்கால்வாசி இருக்கைகளை முன்பதிவு செய்து, எல்லோரும் ஒன்றாக புனே நோக்கி செல்கிறார்கள்.
ஹர்பஜன் டிவிட்
இதற்காக ஹர்பஜன் சிங் டிவிட் செய்துள்ளார். அதில் ''பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' என்று சந்தோசமாக டிவிட் செய்துள்ளார்.
யாரா இருக்கும்
இவரது தமிழ் டிவிட்டுகள் இப்போதெல்லாம் வைரல் ஆகி வருகிறது. இவர் ''உங்கள் தமிழ் ஆசிரியர் யார் அய்யா. அவரை நாங்க பார்த்தே ஆகணும். மகிழ்ச்சி... விசில் போடு'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications