Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை மன்னித்து விடு இஷான் கிஷான்.. உருக்கமாக போட்டோ வெளியிட்ட ஹர்திக் பாண்டியா

Recommended Video

இஷான் கிஷனிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா

மும்பை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷானுக்கு காயம் ஏற்படும் அளவிற்கு பந்தை வீசியதற்காக ஹர்திக் பாண்டியா அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

நேற்று மும்பைக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் மும்பை அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் இஷான் கிஷானுக்கு, பாண்டியா எறிந்த பந்தின் மூலம் மோசமான காயம் ஏற்பட்டது. இதனால் இஷான் கிஷான் பாதி போட்டியில் வெளியேறினார்.

பெரிய காயம்

சரியாக மும்பை அணி 13 வது ஓவர் போடும் போது இந்த சம்பவம் நடந்தது. பீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியா, பந்தை பிடித்து வேகமாக கீப்பரை நோக்கி வீசினார். ஆனால் பந்து தரையில் பட்டு மேலே சென்று, கீப்பர் இஷான் கிஷான் முகத்தில் பட்டது. உடனே அவர் கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி கொண்டு வரப்பட்டது. அவரது கண்களுக்கு கீழே பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருந்தது.

கண்டிப்பாக விளையாடுவார்

கண்டிப்பாக விளையாடுவார்

இதையடுத்து அவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். போட்டி முடியும் வரை இஷான் கிஷான் வெளியே வரவேயில்லை. இந்த நிலையில் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. லேசான வீக்கம் மட்டும் இருப்பதாகவும் , அந்த வீக்கமும் இன்னும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்டார்

தற்போது இதுகுறித்து ஹர்திக் பாண்டியா டிவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார். அதில் ''குட்டி பையா! என்னை மன்னித்து விடு'' என்பது போல ஹிந்தி, ஆங்கிலம் கலந்து எழுதியுள்ளார். இவரின் இந்த டிவிட்டிற்கு ரசிகர்கள், இது உங்களின் தவறு இல்லை பாண்டியா என்று பதில் அளித்துள்ளார்கள்.

வருத்தம்

வருத்தம்

இந்த சம்பவம் நடந்த போது அதிகமாக கஷ்டப்பட்டது ஹர்திக் பாண்டியாதான். இஷான் துடித்ததை விட ஹர்திக் அதிகமாக துடித்தார். வேகமாக ஓடிப்போய் இஷான் எப்படி இருக்கிறார் என்று பார்த்தார். பின் போட்டி முடிந்த பின்பும் அவரை சென்று பார்த்து இருக்கிறார்.

Story first published: Wednesday, April 18, 2018, 17:53 [IST]
Other articles published on Apr 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+