Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 வயது ஆப்கன் சிறுவன்.. யாருக்கும் அஞ்சாத குணம்.. 7 அணிகளை சுழலால் மிரட்டும் ரஷீத் கான்!

Recommended Video

IPL 2018, ரஷீத் கான் இந்த ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான வீரர்

சென்னை: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இந்த ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான வீரராக உருவெடுத்து இருக்கிறார். நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடியதை பார்த்து கிரிக்கெட் உலகமே வாயடைத்து போய் இருக்கிறது.

ரஷீத் கான் ஆப்கன் அணியின் ஆல்ரவுண்டர். இவருக்கு 19 வயது மட்டுமே ஆகிறது. தற்போது இவர்தான் சர்வதேச டி-20 பவுலர்களில் நம்பர் ஒன்.

அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். பவுலிங்கில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பொறி பறக்க விடுகிறார். இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் டோணி, கோஹ்லி, ரோஹித், ரெய்னா, அஸ்வின் எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு பார்த்தால் தனியாக இவர் தெரிவார்.

சின்ன சறுக்கல்

சின்ன சறுக்கல்

ரஷீத் கான் சென்னைக்கு எதிரான போட்டியிலும், பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. பஞ்சாப் போட்டியில் கெயில் அதிரடியால் இவரது பவுலிங் பிரித்து எடுக்கப்பட்டது. சென்னைக்கு எதிரான போட்டியில், அம்பதி ராயுடு ரஷீத் கான் பவுலிங்கை பறக்கவிட்டார். இதனால் இவரது மேஜிக் போய்விட்டது என்று எல்லோரும், ரஷீத் கான் மீது வெறும் இரண்டு போட்டிகளின் முடிவில் வன்மத்தை பொழிய ஆரம்பித்தார்கள்.

பெரிய பதிலடி

பெரிய பதிலடி

ஆனால் அவர் நேற்று செய்த பவுலிங் எல்லா விமர்சனத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது. துண்டு ஒருமுறைதான் தவறும் என்று சொல்லாமல் மிரட்டல் விடுத்தார். நேற்று ஹைதராபாத் அணி எடுத்து இருந்த ரன்னிற்கு எளிதாக போட்டியை விட்டுக் கொடுத்துவிட்டு, பேட்ஸ்மேன்கள் மீது பழியை போட்டு ரஷீத் கான் தப்பித்து இருக்கலாம், ஆனால் அந்த 19 வயது குட்டிப்பையன் நேற்று செய்த மேஜிக், பெவிலியலின் இருந்த சச்சினையே திக்கு முக்காட வைத்தது.

அணியில் யாரும் இல்லை

அணியில் யாரும் இல்லை

ரஷீத் கான் மீது இன்னொரு குற்றச்சாட்டும் வைத்து இருந்தார்கள். புவனேஷ்வர்குமார், ஸ்டாண்லேக் ஆகியோர் மிகவும் நன்றாக பந்து வீசி முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றிய பின் ரஷீத் கான் பார்ம் அவுட் வீரர்களின் விக்கெட்டை எடுக்கிறார் என்று, ஆனால் ரஷீத் அதற்கும் தற்போது பதில் அளித்துள்ளார். நேற்றைய போட்டியில் புவனேஷ்வர்குமார், ஸ்டாண்லேக் ஆகிய இரண்டு பேருமே இல்லை. ஆனாலும் மிகவும் குறைவான இலக்கை எளிதாக சமாளித்து விக்கெட் எடுத்துள்ளார்.

நீண்ட தூரம்

நீண்ட தூரம்

தற்போது ஐசிசி தரவரிசையில் டி-20 போட்டியில் பவுலிங்கில் ரஷீத் கான்தான் முதலிடத்தில் இருக்கிறார். ஐபிஎல் போட்டிக்கு தரவரிசை என்ற ஒன்று இருந்தால், அப்போதும், ரஷீத் கான்தான் பவுலிங்கில் முதல் இடம் பிடிப்பார். ஆப்கானிஸ்தான் போன்ற போர் தேசத்தில் பிறந்துவிட்டு, ஜாம்பவான்கள் ஆடும் ஐபிஎல் காட்டில், தனி சிங்கமாக வளம் வரும் ரஷீத் கான்.. கிரிக்கெட் செய்யும் மேஜிக்கிற்காக பெரிய உதாரணம்!

பெரிய வளர்ச்சி

பெரிய வளர்ச்சி

நேற்றைய போட்டியில் 4 ஓவரில் ஒரு ஓவர் இவர் மெய்டன் போட்டார். இரண்டு விக்கெட் எடுத்தார்.மொத்தமாக 11 ரன்தான் கொடுத்தார். தொடர் சாதனையால் கிரிக்கெட் உலகம் இவரை கவனிக்க தொடங்கி உள்ளது. சென்ற வருடம் ஐசிசி மிக முக்கியமான வீரர்களின் பட்டியலில் இவரை வைத்து இருந்தது. இவர் ஐசிசியின் சிறந்த இணை வீரர் விருது வாங்கினார். இப்போது ஆப்கான் அணிக்கு தற்காலிக கேப்டனாக இருக்கிறார்.

Story first published: Wednesday, April 25, 2018, 10:57 [IST]
Other articles published on Apr 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+