ரோஹித்தின் அதிரடிக்கு பின் சச்சின்.. ஒரே நாளில் ஹிட்மேன் ஸ்டைலை மாற்றிய காட் ஆஃப் கிரிக்கெட்!
Recommended Video

மும்பை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடிக்கு பின் சச்சின் இருப்பதாக கூறப்படுகிறது. சச்சின் கொடுத்த சிறப்பு பயிற்சியின் காரணமாகவே ரோஹித் இவ்வளவு சிறப்பாக நேற்று விளையாடி இருக்கிறார்.
நேற்று மும்பைக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் மும்பை அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் அதிராடியாக 52 பந்தில் 94 ரன்கள் எடுத்தார். அதேபோல் பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லியும் மிகவும் சிறப்பாக விளையாடினார்.

மோசமான பார்ம்
ரோஹித் சர்மா இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இருந்தே மோசமான பார்மில்தான் இருந்தார். அது இந்த தொடரிலும் எதிரொலித்தது. முதல் மூன்று ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணியில் இருக்கும் சூரியகுமார் யாதவ், லெவிஸ், இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்கள் மட்டுமே அணியை காப்பாற்றினார்கள்.

வெறும் 44
இந்த நிலையில் முதல் மூன்று போட்டிகளையும் சேர்த்து வெறும் 44 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார். இந்த மூன்று போட்டியிலும் மும்பை அணி மோசமாக தோல்வி அடைந்தது. இதனால் ரோஹித் மீதான விமர்சனங்கள் அதிகமானது. ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் அணியா இப்படி விளையாடுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உதவி
இந்த நிலையில் இவர் நேற்று பெங்களூர் போட்டிக்கு முன்பாக சச்சின் உதவியை ரோஹித் நாடினார். இதனால் சச்சின் நேற்று ரோஹித்துடன் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பயிற்சி செய்தார். எந்த மாதிரி ஆட வேண்டும், உடனடியாக பார்ம் அவுட் மனநிலையைவிட்டு எப்படி வெளியே வர வேண்டும் என்று சச்சின் அவருக்கு பயிற்சி அளித்தார்.

சூப்பர் பாஸ்
அதேபோல் ரோஹித்திற்கு பந்தை கணிப்பதில் சில பிரச்சனைகள் இருந்தது. அதையும் சச்சின் நேற்று சரி செய்துள்ளார். இதனால்தான் நேற்று ஒரே போட்டியில் ரோஹித் 94 ரன்கள் எடுத்தார். ரோஹித் இதில் 52 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடக்கம்.


Click it and Unblock the Notifications