For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மாதிரிதான் அஸ்வின்... பெரிய ஆளா வருவார்.. ஆருடம் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர்!

பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அப்படியே சென்னை கேப்டன் தோனி போலவே விளையாடுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

By Shyamsundar

Recommended Video

தோனி மாதிரிதான் அஸ்வின்..ஆருடம் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர்!- வீடியோ

மொஹாலி: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அப்படியே சென்னை கேப்டன் தோனி போலவே விளையாடுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். அஸ்வினிடம் தோனியின் சாயலை காண்பதாக அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். அவரது இந்த கேப்டன்சிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற பஞ்சாப் இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்ற பெற வேண்டும். அதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை வெற்றி கொண்ட இரண்டு அணிகள் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மட்டும்தான்.

சூப்பர் கேப்டன்சி

சூப்பர் கேப்டன்சி

அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, அவரை வைத்து எல்லோரும் கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது 9 போட்டிகளில், 3 போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி, 6ல் வென்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பஞ்சாப் அணியை கொண்டு வந்துள்ளார். அஸ்வின் கேப்டன் ஆன பின் பேட்டிங், பீல்டிங்கிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். கோஹ்லி, டோணி, ரோஹித் போன்ற முக்கியமான கேப்டன்களுக்கு போட்டியாக அணியை வழிநடத்திக் கொண்டு உள்ளார்.

சென்னை

சென்னை

அஸ்வின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அப்போதே ஏப்ரல் 15ம் தேதியை சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள். டோணியும், அஸ்வினும் மோதும் போட்டி எப்படி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். அஸ்வின் தன் குரு தோனியவே வீழ்த்தி, சென்னை அணியை தோற்கடித்தார். இப்போது பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியுடன் பஞ்சாப் தீவிரமாக போட்டியிட்டு வருகிறது.

அஸ்வின் எப்படி

அஸ்வின் எப்படி

இந்த நிலையில் அஸ்வினை குறித்து பஞ்சாப் வீரர் ஆரோன் பின்ச் முக்கியமான விஷயம் ஒன்று கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில் ''அஸ்வினிடம் மிகவும் சிறந்த தலைமை பண்பு இருக்கிறது. போட்டிக்கு முன் நாள் எல்லா வீரரையும் தனியாக சந்தித்து பேசுகிறார். ஒன்றுக்கு இரண்டு திட்டம் போட்டு களத்தில் இறங்கி ஆடுகிறார். எந்த வீரரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது. அவர் இதற்கு முன் பல வருடம் கேப்டனாக இருந்தது போல செயல்படுகிறார்'' என்றுள்ளார்.

அப்படியே தோனி

அப்படியே தோனி

தோனி சொன்னால் களத்தில் சாக கூட தயார் என்று அஸ்வின் குறிப்பிட்டு இருந்தார். அதை குறிப்பிட்ட பின்ச் ''அஸ்வினிடம் தோனியின் சாயல் தெரிகிறது. அவரைப்போலவே அஸ்வின் மிகவும் அமைதியாக இருக்கிறார். எந்த விஷயத்தையும் தலையில் ஏற்றுக் கொள்வதில்லை. கடைசி நேரத்தில் மிகவும் கூலாக செயல்படுகிறார். தோனியிடம் இருந்து அவர் நிறைய கற்றுக் கொண்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, May 8, 2018, 11:34 [IST]
Other articles published on May 8, 2018
English summary
IPL 2018: I see Dhoni in Ashwin says, Aaron Finch.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+