Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டு வரும் டு பிளசிஸ்.. முதுகுவலியில் டோணி.. இன்றைய சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்!

Recommended Video

ஐபிஎல் 2018, இன்றைய சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்!- வீடியோ

மொஹாலி: சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக இன்று விளையாடும் போட்டியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

கடைசியாக சென்னை விளையாடிய போட்டியின் போது டோணி மோசமான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இப்போதும் முதுகு வலி கொஞ்சம் சரியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று எப்படியாவது வெற்றிபெற்று, மீண்டும் புள்ளி பட்டியலில் மேலே வர சென்னை முடிவெடுத்துள்ளது.

ரெய்னா

ரெய்னா

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியின் போது ரெய்னா காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் காயத்தில் இருந்து குணமாகி வந்துள்ளார். இதனால் இன்று நடக்கும் போட்டியில் மீண்டும் அவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. முரளி விஜய் மீண்டும் அணியில் இடம்பெற மாட்டார்.

டு பிளசிஸ் விளையாடுவார்

டு பிளசிஸ் விளையாடுவார்

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று போட்டிகளில் டு பிளசிஸ் விளையாடவில்லை. தொடர்ச்சியாக காயம் மிகவும் பெரிய அளவில் இருந்ததால் அவர் விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரும் குணமாகி இருக்கிறார். இதனால் அவர் இன்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி அவர் களமிறங்கினால், வாட்சனுக்கு அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்படும்.

டோணி விளையாடுவாரா

டோணி விளையாடுவாரா

சென்ற போட்டியில் டோணி கீப்பிங் செய்த போதே அவருக்கு முதுகில் பிரச்சனை ஏற்பட்டது. அடிக்கடி இதனால் கஷ்டபட்டுக் கொண்டு இருந்தார். தசை பிடிப்பு காரணமாக இந்த முதுகு பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. அவர் பேட்டிங் இறங்கிய போதும் இந்த பிரச்சனை இருந்தது. இதனால் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்று டோணியின் தனிப்பட்ட மருத்துவ ஆலோசகர் தகவல் தெரிவித்துள்ளார்.

உத்தேசமான அணி

உத்தேசமான அணி

டு பிளசிஸ், ரெய்னா, ராயுடு, சாம் பில்லிங்ஸ், டோணி, ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன், டேவிட் வில்லி, கார்ன் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் உத்தேசமாக அணியில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வாட்சன் மிகவும் நல்ல பார்மில் இருப்பதால், அவரை அணியில் இருந்து எடுப்பது மோசமான முடிவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Friday, April 20, 2018, 15:53 [IST]
Other articles published on Apr 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+