Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சிக்ஸ் அடித்தால் சந்தோசமாக உள்ளது.. ஆனால் எங்களுக்கு எதிராக ஆடுவதுதான்.. வருந்தும் கோஹ்லி

Recommended Video

தோனி சிக்ஸ் அடித்தால் சந்தோசமாக உள்ளது..-கோலி

பெங்களூர்: தோனி சிக்ஸ் அடிப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எதிராக அடிப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது என்று தோனியின் நேற்றைய ஆட்டம் குறித்து கோஹ்லி பேட்டி அளித்துள்ளார்.

நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.

புகைப்படம்

புகைப்படம்

தோனியின் வளர்ப்பு கோஹ்லி என்பதால் இந்த போட்டி மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக சென்னை, பெங்களூர் என்பதாலும் இந்த போட்டியை எல்லோரும் எதிர்பார்த்தார்கள். டாஸ் போடுவதற்கு முன் கோஹ்லியும் தோனியும் ஒன்றாக சேர்ந்து பிட்சை பார்த்தார்கள். அதேபோல் போட்டிக்கு முன்பாக இரண்டு பேரும் கட்டிபிடித்துக் கொண்டார்கள் . இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

கோஹ்லி கொடுத்த பேட்டி

கோஹ்லி கொடுத்த பேட்டி

இந்த போட்டிக்கு பின் கோஹ்லி பேட்டி அளித்தார். அதில் ''இந்த போட்டியில் பிட்ச் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இரண்டு அணியும் அதிக ஸ்கோர் அடிக்கும் விதத்தில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனாலும் சிறந்த பேட்டிங் காரணமாக அதிக இலக்கை இரண்டு அணிகளும் எடுக்க முடிந்தது'' என்றார்.

பாராட்டு

பாராட்டு

இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய தோனியை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்தியா முழுக்க இருக்கும் திரை நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் கிரிக்கெட் உலகம் அவரது ஆட்டத்தை பார்த்து வியந்து போய் இருக்கிறது. தற்போது கோஹ்லியும் தோனியின் ஆட்டத்தை வியந்து பாராட்டி இருக்கிறார்.

தோனி அதிரடி ஆட்டம்

தோனி அதிரடி ஆட்டம்

தோனி பற்றி பேசிய கோஹ்லி ''தோனி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். அவர் மிகவும் நல்ல இடத்தில் இருக்கிறார் (சிஎஸ்கே). அவரை இப்படி பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அவர் எப்போதும் போல நிதானமாக அவரது ஸ்டைலில் ஆடுகிறார். இந்த போட்டி அவருக்கானது. அவரை பாராட்ட வேண்டும்.'' என்று குறிப்பிட்டார்

தோனியின் ஆட்டம்

தோனியின் ஆட்டம்

மேலும் ''தோனி இப்படி ஆடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. அவர் சிக்ஸ் அடிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எங்கள் அணிக்கு எதிராக அவர் சிக்ஸ் அடிப்பதை பார்க்கத்தான் கஷ்டமாக இருக்கிறது'' என்று சிரித்துக் கொண்டே தோனியை பாராட்டி இருக்கிறார்.

Story first published: Thursday, April 26, 2018, 11:10 [IST]
Other articles published on Apr 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+