கடைசி நேரத்தில் வந்த வாய்ப்புதான்... தனி ஆளாக ஐபிஎல்லை ஆட்டிப்படைக்கும் கேன் வில்லியம்சன்
Recommended Video

சென்னை: ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய சிறந்த தலைமைப்பண்பால் அவரது அணியை நன்றாக வழிநடத்தி வருகிறார். அணியில் இருக்கும் எந்த வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இவருக்கு தெரிந்துள்ளது.
அணியில் பெரிய அளவில் ஸ்டார் வீரர்கள் இல்லை என்றாலும், நன்றாக அணியை வழிநடத்துகிறார். முக்கியமாக கடைசி நேரத்தில் அணிக்குள் வந்து, அணியை சரியாக புரிந்து கொண்டு விளையாடுகிறார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஐபிஎல் தொடரில் இவர்மட்டும்தான் வெளிநாட்டு கேப்டன். ஆனாலும் ரோஹித், ரஹானே, கோஹ்லிக்கு தெரியாத இந்திய பிட்ச் மகிமை இவருக்கு தெரிந்துள்ளது.

கடைசி நேர வாய்ப்பு
ஹைதராபாத் அணிக்கு கடைசி நேரத்தில் கேப்டன் ஆனவர்தான் கேன் வில்லியம்சன்தான். ஹைதராபாத் அணி வார்னர் இல்லாமல் தவித்த போது, கடைசியில் அணிக்குள் வந்தார், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன். இவரை ஏன் கேப்டனாக தேர்ந்தெடுத்தார்கள் என்று ஹைதராபாத் ரசிகர்களே குழம்பிப் போய் இருந்தனர். ஆனால் அதன்பின் இவர் நிகழ்த்தியது எல்லாம் அசாத்திய சாதனைகள்.

பவுலிங்கை புரிந்து கொண்டார்
அவர் அணிக்கு வந்த போது அணியில் இருந்தது நல்ல பவுலிங் ஆர்டர் மட்டுமே. ஒரு வாரத்தில் அணியின் பவுலிங் பலத்தை புரிந்து கொண்டு அதை வைத்தே தொடர்ச்சியாக போட்டிகளை வெற்றிபெற்றுள்ளார். இப்போது புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் அணி 3ம் இடத்தில் இருக்கிறது. கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை பைனலுக்கு கொண்டு சென்றால் கூட சந்தேகப்படுவதற்கு இல்லை.

மோசமான பேட்டிங் ஆர்டர்
இந்த அணியின் பெரிய பிரச்சனை என்றால் அது பேட்டிங் ஆர்டர் மட்டும்தான். நேற்று போட்டியில் கூட அந்த அணி 118 ரன்கள்தான் எடுத்தது. தொடக்கத்தில் கேன் வில்லியம்சன் மிகவும் மோசமாக ஆடினார். ஆனால் இப்போது பிட்ச் நிலவரத்தை புரிந்து கொண்டு தன்னை மொத்தமாக மாற்றியுள்ளார். கடந்த மூன்று போட்டியில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளார். அதேபோல் கடைசி நேரத்தில் யூசுப் பதானும் அதிரடி காட்டி அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார்.

நல்ல வாய்ப்பு
தற்போது வரை அந்த அணி 6 போட்டியில் 4ல் வெற்றி பெற்று இருக்கிறது. 2ல் தோல்வி அடைந்து இருக்கிறது. ரஷீத்கான், புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, தவான், கேன் வில்லியம்சன் என்று அணியின் ஒவ்வொரு வீரர்களும் முக்கியமான கட்டத்தில் அணிக்கு உதவுகிறார்கள். இப்படியே சென்றால், கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications