Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா என்னைவிட வேகமாக ஓடுங்க பாஸ்.. மன்தீப் சிங்கிடம் போட்டியிடும் கோஹ்லி! -வீடியோ

Recommended Video

மன்தீப் சிங்குடன் கோஹ்லி நடத்திய போட்டி!

பெங்களூர்: பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி சக வீரர் மன்தீப் சிங்கிடம் ஓட்டப்பந்தய போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பெங்களுர் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் ஐபிஎல் லீக் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகளும் இதற்கு முன்பு மோதிய போட்டியில், கொல்கத்தா வெற்றிபெற்றது.

இதனால் இன்று நடக்கும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மன்தீப் சிங்கிடம் கோஹ்லி விளையாட்டாக ஒரு போட்டி வைத்துள்ளார்.

சூப்பர் வேகம்

சூப்பர் வேகம்

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் கோஹ்லி, காலனி நிறுவனம் ஒன்றிற்காக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விராட் கோஹ்லி எவ்வளவு வேகமாக ஓடுகிறார் என்று சோதனை செய்து இருக்கிறார்கள். மொத்தம் மூன்று ரன்கள் ஓடினாள் எவ்வளவு நேரத்தில் ஓடுவார் என்று சோதனை செய்துள்ளனர். கோஹ்லி 8.9 நொடிகளில் அந்த தூரத்தை கடந்து இருக்கிறார்.

என் ஏரியாவுக்கு வா

இதுதான் தன்னுடைய மிக சிறப்பான ஓட்டம் என்று கோஹ்லி குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு, முடிந்தால் என்னைவிட வேகமாக ஓடுங்கள் என்று சக வீரர் மன்தீப் சிங்கிடம் போட்டி வைத்து இருக்கிறார். இவர் அதை வீடியோவாக வெளியிட்டும் உள்ளார்.

ஒப்புக்கொண்டார்

தற்போது மன்தீப் சிங் கோஹ்லியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். நானும் போட்டிக்கு தயார், வலுவான போட்டி நடக்க போகிறது தயாராக இருங்கள் என்று கோஹ்லியிடம் அவர் பதில் அளித்துள்ளார்.

புதிய எதிர்பார்ப்பு

புதிய எதிர்பார்ப்பு

பெங்களூர் அணிக்காக விளையாடும் மன்தீப் தற்போது மிகவும் நல்ல பார்மில் இருக்கிறார். ஐபிஎல் இந்த வருட ஏலத்தில் இவர் 1.4 கோடி கொடுத்துதான் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் பெங்களூர் அணி மோசமாக கஷ்டப்படும் சமயங்களில் மிகவும் திறமையாக விளையாடி வருகிறது. இவரும் கோஹ்லியும் தற்போது நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.

Story first published: Sunday, April 29, 2018, 12:20 [IST]
Other articles published on Apr 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+