ஆரஞ்ச் கேப் எனக்கு வேண்டாம்.. இது பெரிய விஷயம் இல்லை.. தோல்வியில் கலங்கிய கோஹ்லி!
Recommended Video

மும்பை: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோஹ்லிக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கேப் தனக்கு தேவையில்லை, அதை அணிவதில் அர்த்தம் இல்லை என்று கோஹ்லி பேட்டி அளித்துள்ளார்.
நேற்று மும்பைக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் மும்பை அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித்தும், பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லியும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ரோஹித் அதிரடியாக 52 பந்தில் 94 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் அதிரடி
இந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் இறங்கிய கோஹ்லியும் அதிரடி காட்டினார். இதில் 62 பந்துகள் பிடித்த கோஹ்லி 92 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ் 4 பவுண்டரி அடக்கம். முதலில் மிகவும் பொறுமையாக ஆடிய கோஹ்லி போக போக அதிரடி காட்டினார்.

பெங்களூர் தோல்வி
ஆனாலும் பெங்களூர் அணி கடைசியில் தோல்வி அடைந்தது. அவருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க அந்த அணியில் வீரர்கள் இல்லாமல் போனார்கள். எந்த வீரரும் 20 ரன்களுக்கு மேல் எடுக்கவே இல்லை. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது.

கோஹ்லிக்கு ஆரஞ்ச் கேப்
இதையடுத்து கோஹ்லிக்கு ஆரஞ்ச் கேப் கொடுக்கப்பட்டது. அதிக ரன் எடுத்து இருக்கும் வீரருக்கு இந்த கேப் வழங்கப்படும் . 4 போட்டிகளில் விளையாடிய கோஹ்லி 201 ரன்களுடன் இந்த ஆரஞ்ச் கேப்பை பெற்றுள்ளார். 3 போட்டிகளில் விளையாடி 178 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஆரஞ்ச் கேப் வேண்டாம்
இந்த ஆரஞ்ச் கேப் பெற்ற பின் கோஹ்லி பேட்டி அளித்தார். அதில் ''எனக்கு இப்போது இந்த ஆரஞ்ச் கேப் தேவையில்லை. இதை பெறுவதில் இப்போது ஏதும் அர்த்தம் இருக்குமா என்று தெரியவில்லை. இந்த ஆரஞ்ச் கேப் எனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை'' என்று பெங்களூர் அணியின் தோல்வி குறித்து மிகவும் வருத்தமாக பேசினார்.


Click it and Unblock the Notifications