For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷப்னம் கில், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம்... சிஎஸ்கேவுக்கு எதிராக கொல்கத்தா அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2.2 ஓவர்கள் மிதமிருக்கையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

8 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும் முதல் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும் கொல்கத்தாவில் இன்று மோதின.

வலுவான நிலையில் சிஎஸ்கே

வலுவான நிலையில் சிஎஸ்கே

சென்னை அணிக்கு ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இன்றைய ஆட்டத்துடன் சேர்த்து மேலும் 6 ஆட்டங்கள் உள்ள நிலையில் இரண்டில் வென்றாலே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். அதே நேரத்தில் புள்ளிப் பட்டியில் முதலிடத்தை விடுவதற்கு சிஎஸ்கே தயாராக இல்லை.

பிளே ஆப் வாய்ப்பு அதிகரிக்கும்

பிளே ஆப் வாய்ப்பு அதிகரிக்கும்

அதே நேரத்தில் கொல்கத்தா அணி 4 வெற்றிகளை பெற்று, நான்காவது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூர், டெல்லி அணிகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு வெற்றியும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமாகும்.

அசத்தல் அதிரடி ஆட்டம்

அசத்தல் அதிரடி ஆட்டம்

கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளாசி 27, ஷேன் வாட்சன் 36, சுரேஷ் ரெய்னா 31,. ராயுடு 21, ஜடேஜா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா அபார வெற்றி

கொல்கத்தா அபார வெற்றி

வெற்றிக்கு 178 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கிறிஸ் லைன் 12, சுனில் நரேன் 32, ராபின் உத்தப்பா 6, ரிங்கு சிங் 16 ரன்களுக்கு அவுட்டாயினர். ஆட்டமிழக்காமல் ஷப்னம் கில் 57 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த சீசனில் பெற்ற 5வது வெற்றியை அடுத்து புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு கொல்கத்தா முன்னேறியது. சிஎஸ்கே 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Story first published: Thursday, May 3, 2018, 23:36 [IST]
Other articles published on May 3, 2018
English summary
IPL 2018: Kolkata is facing the strongest Chennai.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+