போடு லுங்கி டான்ஸ்.. காயத்தால் அவதிப்படும் தீபக் சாஹர்.. சிஎஸ்கேவில் இணையும் லுங்கிசனி கிடி!
சென்னை: தென்னாப்பிரிக்க வீரர் லுங்கிசனி கிடி சிஎஸ்கே விளையாடும் அடுத்த போட்டியில் தீபக் சாஹருக்கு பதில் களமிறங்க இருக்கிறார். தீபக் சாஹர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் இரண்டு வாரம் அவர் அணிக்கு திரும்ப மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார். தற்போது சென்னை அணி இரண்டு தோல்வி ஐந்து வெற்றியுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து அணிகளும் ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடினமாக போட்டியிட்டுக் கொண்டுள்ளது.

மோசமான காயம்
இந்த நிலையில் நேற்று மும்பைக்கு எதிரான போட்டியின் போது, தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. அவர்தனது மூன்றாவது ஓவரை போட்டுக்கொண்டு இருந்த போது காயம் ஏற்பட்டது. அவரது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் கடைசி வரை களத்திற்கு வரவே இல்லை.

அணியில் விளையாட மாட்டார்
இந்த நிலையில் தற்போது அவர் அணியில் இரண்டு வாரம் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றில் இருந்து 4 போட்டிகள் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய போட்டியில் கூட பிரதிபலித்தது. அவர் தொடையில் ஏற்பட்ட காயம் சரியாக இரண்டு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

லுங்கிசனி
இந்த நிலையில்தான் சென்னை அணியில் லுங்கிசனி கிடி இணைத்து இருக்கிறார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்த இளம் வீரர், தற்போதுதான் சென்னை அணியில் சேர்ந்து இருக்கிறார். இதுவரை அவர் சென்னை அணியில் விளையாடவில்லை. அவரது தந்தை மரணம் அடைந்துவிட்டதால், அவர் தென்னாப்பிரிக்கா சென்று இருந்தார், தற்போது மீண்டும் அவர் அணியில் இணைத்துள்ளார்.

தொடரும் பிரச்சனை
ஏற்கனவே கேதார் ஜாதவ் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். டு பிளசிஸ் காயம் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இடையில் ரெய்னாவிற்கு காயம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த போட்டியில் அம்பதி ராயிடுவிற்கு காயம் ஏற்பட்டது. பின் தோனிக்கு முதுகுவலி ஏற்பட்டது. இது சென்னை அணிக்கு கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications