Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கம் தெரியும்.. மகேந்திர சிங்கம் தோனி தெரியுமா.. சிஎஸ்கே வெற்றியை கொண்டாடும் மீம்ஸ் தொகுப்பு

Recommended Video

IPL 2018, சின்னச்சாமி மைதானத்தை சின்னாபின்னமாக்கிய தோனி!

பெங்களூர்: நேற்று பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை வெற்றிபெற்றதை வைத்து இணையத்தில் நிறைய மீம்ஸ் வலம் வருகிறது. முக்கியமாக கடைசி நேரத்தில் ஏற்பட்ட பதட்டத்தை வைத்து அதிக மீம்கள் வந்துள்ளது.

நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.

எப்ப ஹார்ட் அட்டாக்

எப்ப ஹார்ட் அட்டாக்

எல்லா போட்டியிலும் சென்னை அணி கடைசி நேரத்தில்தான் வெற்றி பெறுகிறது. இதனால் மக்களின் இதயத்துடிப்பும் அதிகம் ஆகிறது. இவர் இதை வைத்து மீம் போட்டுள்ளார். நமக்கு எப்ப ஹார்ட் அட்டாக் வருமோ.

தாஹிர் மீம்

தாஹிர் மீம்

இவர் ''காட்டுல வேட்டையாடுற சிங்கத்தை பார்த்து இருப்ப, காக்கி சட்டை போட்ட சிங்கத்தை பார்த்து இருப்ப, மஞ்ச சட்ட போட்ட மகேந்திர சிங்கத்தை பார்த்து இருக்கியா? ஓங்கி அடிச்சா 110 மீட்டர் சிக்ஸ் பார்த்து இருக்கியா? இது பொசுக்குற கூட்டம் கண்ணா'' என்று தாஹிர் டிவிட்டை வைத்து மீம் போட்டுள்ளார்.

அணியைவிட்டு செல்ல வேண்டுமா

அணியைவிட்டு செல்ல வேண்டுமா

இவர் ''என்ன பாஸ் பாண்டியா சரியா ஆடலைனா மட்டும் பிரஷர், தோனி சரியா ஆடலைனா அவர் டீம் விட்டு போகணுமா?'' என்று கேள்வி கேட்டுள்ளார்.

14 உயிர் பாஸ்

14 உயிர் பாஸ்

இவர் ''அண்டர்டாக்கருக்கு 7 உயிர்னா, சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு 14 உயிர்'' என்று ஐபிஎல் தொடரின் 14 போட்டிகளை பற்றி மீம் போட்டுள்ளார்.

வைரல்

வைரல்

இவர் ''118 கூட சேஸ் பண்ணாத மும்பை எங்க? 205 கூட சேஸ் பண்ணுற சென்னை எங்க?'' என்று வைரல் மீம் போட்டுள்ளார்.

எப்போதும் தல

எப்போதும் தல

இவர் ''நான் நாலாவது படிச்சப்ப கூட இவர்தான் மேட்ச் பினிஷ் பண்ணினார். இப்ப நான் படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போறேன். இப்பவும் இவர்தான் மேட்ச் பினிஷ் பண்ணுறார்'' என்று மீம் போட்டுள்ளார்.

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

இவர் சென்னை அணியில் வயதான வீரர்கள் இருப்பதை வைத்து முதியோர் இல்லம் என்று கிண்டல் செய்தவர்களை மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

எவ்வளவு கஷ்டம் தெரியுமா

இவர் ''இந்த 205 ரன்ன அடிக்க ABD எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு தெரியுமாடா'' என்று கலாய்த்துள்ளார்.

ஏன் பாஸ் இப்படி

கடைசி நேர த்ரில்லை வைத்து இவர் ''மொதல்ல எங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போடா ராசா'' என்றுள்ளார்.

Story first published: Thursday, April 26, 2018, 12:52 [IST]
Other articles published on Apr 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+