Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 நாள் போட்டியில் இத்தனை வீரர்களுக்கு காயமா?.. ஐபிஎல் பரிதாபங்கள்

Recommended Video

IPL 2018:இதுவரை காயமடைந்த வீரர்கள் பட்டியல்

சென்னை: ஐபிஎல் போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே நிறைய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிலர் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளனர்.

காயம் ஏற்பட்டவர்கள் எல்லோரும் முன்னணி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார் போன்ற இந்திய வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

இது ஐபிஎல் போட்டியை மட்டுமில்லாமல் அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வீரர்கள் பலர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜாதவ்

ஜாதவ்

சென்னை வீரர் கேதார் ஜாதவ் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இருந்து விலகியதுதான் இந்த வருடம் ஹாட் டாப்பிக். நல்ல பார்மில் இருந்த இவர் கையில் ஏற்பட்ட சிறு காயத்தால் மொத்தமாக அணியில் இருந்து விலகினார். இப்போது அவர் இடத்தை இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் நிரப்பி இருக்கிறார்.

மோசமான நிலையில் டு பிளசிஸ்

மோசமான நிலையில் டு பிளசிஸ்

அதே போல் சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டு பிளசிஸ் மோசமான காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவரது காயத்தால் முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்க முடியாமல் போய்விட்டது. அடுத்த போட்டியிலும் இவர் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை அணிக்கு ஓப்பனிங் சமயங்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

ரெய்னா ஆட மாட்டார்

ரெய்னா ஆட மாட்டார்

கடைசி போட்டியில் ரெய்னா விளையாடிய போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது அவர் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியிலும், வெள்ளிக்கிழமை நடக்க ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

மும்பை விளையாடிய சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா காலில் அடிப்பட்டது. இது எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் இந்த காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இதனால் மும்பை அணி அதிகம் திணறியது. அடுத்த போட்டியிலும் இவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.

புவனேஷ்வர்

புவனேஷ்வர்

இதேபோல் ஹைதராபாத் அணி வீரர் புவனேஷ்வர்குமாரும் அணியில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் தற்போது இவர் இரண்டு போட்டிகளில் இருந்து மட்டும் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது.

கும்மின்ஸ்

கும்மின்ஸ்

மேலும் மும்பை வீரர் பேட் கும்மின்ஸ் அணியில் இருந்து மொத்தமாக விலகி உள்ளார். அவருக்கும் கையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்கனவே வெற்றி பெற கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் மும்பை அணிக்கு அதிக பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இன்னும்

இன்னும்

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே சில வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்கள். ரபாடா, பேட் கும்மின்ஸ், மிட்சல் ஸ்டார்ஸ், மிட்சல் சாண்டர் ஆகியோர் அணியில் இருந்து விலகினார்கள். இதனால் எல்லா அணிக்கும் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது புதிய வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Story first published: Friday, April 13, 2018, 10:26 [IST]
Other articles published on Apr 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+