
யார் இவர்
நீண்ட நாட்களாக கிரிக்கெட் விமர்சகர்கள் பார்வையில், வாய்ப்பு கிடைக்காமல் விளையாடிக்கொண்டு இருக்கும் தமிழக வீரர் முருகன் அஸ்வின், தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதற்கு முன் புனே, டெல்லி அணிக்காக அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது பெங்களூர் அணிக்காக 2.2 கோடியில் எடுக்கப்பட்டார். இவரை தோனி பாராட்டியதில் இருந்து அனைவரது பார்வையும் இவர் மீது சென்றது.

லெக் ஸ்பின்
நேற்று இவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும்,. இவரது லெக் ஸ்பின், கோஹ்லியையே பல சமயங்களில் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. முக்கியமாக இவர் போடும் 'கூக்லி' கொல்கத்தா பேட்ஸ்மேன்களை திணற அடித்தது. முக்கியமாக முதல் ஓவரில் முதல் பந்திலேயே அவர் விக்கெட் எடுத்து எதிரணியை கலங்கடித்தார்.

இன்னும் கூட விக்கெட் எடுத்து இருப்பார்
நேற்றைய போட்டியில் இவர் இரண்டு விக்கெட் எடுத்தார். பீல்டர்கள் சரியாக செயல்பட்டு இருந்தால், அவர் இன்னும் இரண்டு விக்கெட் அதிகமாக எடுத்து இருப்பார். கோஹ்லியின் பீல்டிங் அமைப்பில் நேற்று நிறைய சொதப்பல்கள் இருந்தது. நிற்கவைக்கப்பட்ட பீல்டர்களும் நிறைய கேட்ச்களை விட்டனர். ஒரு ஓவரில் முருகன் அஸ்வின் போடும் மூன்று கூக்லிகள், கொல்கத்தா அணியை பெரிய அளவில் திணற வைத்தது.

பெரிய மாற்று
சென்னையில் இருந்து தற்போது மூன்று ஸ்பின் பவுலர்கள் இருக்கிறார்கள். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஆஃப் ஸ்பின் பவுலர்கள். ரவி அஸ்வின் இன்னும் முழுமையான லெக் ஸ்பின் பவுலராக மாறவில்லை. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் மாற்றாக முருகன் அஸ்வின் உருவெடுத்து இருக்கிறார். ஆனால் இந்த ஒரு போட்டியை வைத்து மட்டும் இவரது திறமையை அளவிட முடியாது என்பதால், பெங்களூருக்கு மீதம் இருக்கும் போட்டிகளில் இவரது ஆட்டம் அதிக கவனத்தை பெறும்.


Click it and Unblock the Notifications











