For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சின்ன தலனா சும்மாவா!.. ஒரே போட்டியில் மீண்டும் கோஹ்லியை முந்திய ரெய்னா!

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

மீண்டும் முதலிடம் வந்த சின்ன தல ரெய்னா

ஹைதராபாத் : ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் ரெய்னா மிகவும் அதிரடியாக ஆடி கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. 2வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்து வருகிறது.

சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மோசமான தொடக்கம்

மோசமான தொடக்கம்

சென்னை அணி இதில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்கத்திலேயே சென்னை அணி வாட்சன், டு பிளசிஸ் ஆகியோரை இழந்தது. வாட்சன் 9 ரன்களுக்கும், டு பிளசிஸ் 11 ரன்களுக்கும் அவுட் ஆனார். ஆனால் அதன்பின் சென்னை அணி ரெய்னா, மற்றும் அம்பதி ராயுடு ஜோடியால் மீண்டு வந்தது.

ரெய்னா சாதனை

ரெய்னா சாதனை

இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் ரெய்னா ஒரு சாதனையை கையில் வைத்து இருந்தார். அதன்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெயருடன் வலம் வந்தார். ரெய்னா அப்போது வரை 4558 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். சில மோசமான ஆட்டங்கள் ஆடினாலும் அவரை யாரும் முந்தவில்லை.

கிங் கோஹ்லி

கிங் கோஹ்லி

ஆனால் கோஹ்லி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ருத்ர தாண்டவம் மூலம் இந்த சாதனையை முறியடித்தார். அவர் 62 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதனால் ரெய்னாவின் சாதனையை முறியடித்து, 4619 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த போட்டியில் 30 ரன்கள் எடுத்து இதை 4649 ஆக உயர்த்தினார்.

கைப்பற்றினார்

கைப்பற்றினார்

ஆனால் ரெய்னா விடுவதாக இல்லை. கோஹ்லியின் சாதனையை அவர் இந்த போட்டியில் முறியடித்துள்ளார். ரெய்னா இந்த போட்டியில் அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். இதன் மூலம் அவர் 4658 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே இப்போது அதிகபட்ச ஐபிஎல் ரன் ஆகும்.

Story first published: Sunday, April 22, 2018, 18:06 [IST]
Other articles published on Apr 22, 2018
English summary
Raina beats Kohli again as the Higest run scorer in IPL 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X