Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடன், சாப்பாடு இல்லை.. 4 வருடம் காத்திருக்க வேண்டும்.. ஜோஃரா ஆர்ச்சரின் வாழ்க்கையை மாற்றிய ஐபிஎல்

Recommended Video

கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்திய மெஸ்சி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜோஃரா ஆர்ச்சர் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் போல பல திருப்பங்களை கொண்டு இருக்கிறது.

இந்த ஐபிஎல் போட்டியில் அவருக்கு கடைசியில்தான் வாய்ப்பு வந்தது. அதிலும் கூட ராஜஸ்தான் அணி அதிக காசு கொடுத்து எடுத்து இருந்தாலும் தொடக்கத்தில் அவரை வெறுமனே உட்கார வைத்துதான் இருந்தனர்.

மும்பைக்கு எதிராகத்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் அப்படியே சரியாக பயன்படுத்திக் கொண்டார்,. 4 ஓவர் போட்டு மொத்தம் 3 விக்கெட் எடுத்தார் இந்த பிளாக் பந்தர். இதில் பாண்டியா சகோதரர்கள், மிட்சல் விக்கெட் அடக்கம்.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

இந்த ஐபிஎல் தொடருக்காக இவர் மிகவும் கடைசி நேரத்தில்தான் தேர்வானார். இவரை ராஜஸ்தான் அணி 7.2 கோடி கொடுத்து எடுத்தது. என்ன, யார் இந்த வீரர் இவருக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுத்து அணியில் எடுத்து இருக்கிறார்கள் என்று எல்லோரும் கேள்வி கேட்டு வந்தார்கள். பலருக்கு இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது கூட தெரியாது. ஏனென்றால் ஆர்ச்சரின் வாழ்க்கையில் அவ்வளவு குழப்பங்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி

இவர் மேற்கிந்திய தீவுகள் அணியில்தான் விளையாட வேண்டும் என்று இருந்தார். அந்த தீவில் குடியுரிமை கொண்ட இவர், உள்ளூர் அணிகளில் விளையாடி வந்தார். ஆனால் ஏற்கனவே பல குழப்பம் நிலவும் கேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் எல்லா முக்கிய வீரர்களையும் எப்படி புறக்கணித்து, தனக்கு தானே மண்ணள்ளி போட்டுக்கொண்டதோ அதே போல், ஆர்ச்சருக்கும் வாய்ப்பளிக்காமல் பிரச்சனை செய்து வந்தது.

மிக மோசம்

மிக மோசம்

அப்போது ஆர்ச்சர் மிக உச்சக்கட்ட பார்மில் இருந்தார். ஆனால் அவருக்கு மேற்கிந்திய தீவுகளின் அண்டர் 19 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் அப்போது அண்டர் 19 கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக விளையாடினாலும் பல முக்கிய கண்கள் ஆர்ச்சரர் எங்கே இருக்கிறார் என்றுதான் தேடியது. வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஆர்ச்சரர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்து வந்தார்

இங்கிலாந்து வந்தார்

அவரிடம் இங்கிலாந்து குடியுரிமை இருக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து விதிப்படி அவர் 7 வருடம் உள்ளூர் அணிகளில் விளையாட வேண்டும். இதற்காக அவர் தற்போது சில லீக்குகளில் விளையாடி வருகிறார். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 லீக்கிலும் விளையாடி வருகிறார். இந்த தொடர் எல்லாவற்றிலும் கில்லி போல விளையாடும் வீரர் இவர்தான்.

காத்து இருக்க வேண்டும்

காத்து இருக்க வேண்டும்

ஒரு கால்பந்து வீரரின் உடல்வாகில் இருக்கும் இந்த 22 வயதுக்காரர் 26 வயது வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட காத்திருக்க வேண்டும். இன்னும் 4 வருடங்கள் அவர் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை பார்ம் போகாமல் இருக்க அவர், இதுபோன்ற டி-20 லீக்குகளில் விளையாடி வருகிறார்.

வறுமையான வீடு

வறுமையான வீடு

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், இந்த ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 தொடரிலும் வரும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். ஆனாலும் இதுவும் கூட அவர்களின் வறுமைக்கும், கடனுக்கும் போதவில்லை என்றுள்ளார். இந்த ஐபிஎல்லில் இன்னும் அதிக விக்கெட் எடுத்து, எல்லோருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று இவர் முடிவெடுத்துள்ளார்.

Story first published: Tuesday, April 24, 2018, 17:55 [IST]
Other articles published on Apr 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+