தெறிக்கவிட்ட பவுலிங்.. ராஜஸ்தானை வீழ்த்தி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி
ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து உள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை 5 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 5 வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் 3 வெற்றிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

ஹைதராபாத் அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் ராஜஸ்தான் அணியும் நல்ல பவுலிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது.இந்த போட்டி தற்போது ஜெய்ப்பூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இரண்டு அணியிலும் பழைய வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது.டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
முதலில் களமிறங்கிய தவான் 6 ரன்களுக்கு அவுட்டானார். 4 ஓவருக்கு 1 விக்கெட் இழந்து 27 ரன்கள் எடுத்து ஹைதராபாத் விளையாடி வருகிறது. எப்போதும் போல கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 43 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸ், 7 பவுண்டரி அடக்கம்.
அதேபோல் அலெக்ஸ் 39 பந்தில், 45 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தானின் இளம் ''பிளாக் பந்தர்''' ஆர்ச்சர் 4 ஓவர் போட்டு 3 விக்கெட் எடுத்தார்.இதனால் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்தது.ராஜஸ்தானிற்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் தொடக்கத்திலேயே திணறியது. ரஹானே மட்டும் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார்.ராஜஸ்தான் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.ராஜஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications