For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசான டீம் பாஸ்.. யாருமே பார்ம்ல இல்லை.. விமர்சனங்களுக்கு கெத்தாக பதிலடி கொடுக்கும் சிஎஸ்கே!

ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை அணியின் மீது வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு தற்போது அந்த அணி தொடர் வெற்றிகளின் மூலம் பதிலளித்து வருகிறது.

By Shyamsundar

Recommended Video

கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி

சென்னை: ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை அணியின் மீது வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு தற்போது அந்த அணி தொடர் வெற்றிகளின் மூலம் பதிலளித்து வருகிறது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 5 போட்டி விளையாடி 4 வெற்றி ஒரு தோல்வியுடன் சென்னை அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது.

அதேபோல் சென்னை வீரர்களான வாட்சன், ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ ஆகியோர் தொடந்து நிலையாக ஆடி வருகிறார்கள். சென்னை அணியை வயசானவர்களின் அணி என்று கிண்டல் செய்தவர்களுக்கு இப்போது சென்னை வீரர்கள் தங்கள் விளையாட்டு மூலம் பதிலளித்துள்ளனர்.

பெரிய அளவில் வீரர்கள் இல்லை

பெரிய அளவில் வீரர்கள் இல்லை

சென்னை அணி உருவாக்கப்பட்ட போதே, இந்த சென்னை அணி இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சென்னை போல வலுவான அணி கிடையாது என்று கிண்டல் செய்தார்கள். முக்கியமாக அணியில் நல்ல வீரர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாருமே இல்லை, வாட்சன் தொடங்கி ஹர்பஜன், ரெய்னா வரை எல்லோருமே பார்ம் அவுட் வீரர்கள். மீதம் இருப்பவர்களுக்கு அனுபவம் இல்லை என்று கிண்டல் செய்தனர்.

வயதான வீரர்கள்

வயதான வீரர்கள்

அதேபோல் சென்னை அணியில் இருக்கும் 85 சதவிகித வீரர்கள் 30 வயதிற்கும் அதிகம் உள்ளவர்கள். ஆடும் 11 பேர் கொண்ட அணியில் 9 பேர் எப்போதும் முப்பது வயதிற்கும் அதிகமானவர்கள். சென்னை அணி, ஐபிஎல் ஏலத்தின் போதே இதற்காக கிண்டல் செய்யப்பட்டது. இவ்வளவு வயசான அணியை வைத்துக் கொண்டு எப்படி கம்பேக் கொடுப்பார்கள் என்று மற்ற ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள்.

எல்லோருக்கும் பதிலடி

எல்லோருக்கும் பதிலடி

ஆனால், அந்த ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லோரும் என்ன நினைத்தார்களோ அதை சென்னை தவிடுபொடியாக்கி இருக்கிறது. மொத்தம் 5ல் 4 போட்டியை சென்னை வென்றுள்ளது. முக்கியமாக இவர்கள் யாரை வயதானவர்கள் என்று கூறினார்களோ அதே வீரர்களை வைத்து சென்னை வெற்றிபெற்று இருக்கிறது. அதிக கிண்டல் செய்யப்பட்ட வாட்சன், ராயுடு, ரெய்னாதான் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

முக்கியமாக, இதற்கு முந்தைய தொடரில் மும்பை, பெங்களூரு போன்ற பெரிய அணியில் சரியாக விளையாடாத வீரர்களை சென்னை அணி எடுத்தது. ராயுடு, வாட்சன் போன்றவர்கள் சென்ற ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கழட்டிவிடப்பட்டார்கள். ஆனால் டோணி அவர்களுக்கு வாய்ப்பளித்து, இப்போது அவர்களின் திறமையை வெளியே கொண்டு வந்துள்ளார்.

ஒவ்வொரு வீரர்

ஒவ்வொரு வீரர்

இந்த தொடரில் சென்னையில் ஒவ்வொரு போட்டிக்கு ஒரு வீரர் என்று வைத்து விளையாடுகிறார்கள். முதல் போட்டியில் பிராவோ விளையாடினார். இரண்டாவது போட்டியில் சாம் பில்லிங்ஸ் விளையாடினார். மூன்றாவது போட்டியில் டோணி கலக்கினார். ராஜஸ்தான் போட்டியில் வாட்சன் வைத்து செய்தார். இதோ நேற்றைய போட்டியில் அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஒவ்வொரு போட்டியையும் ஒவ்வொரு வீரர் தலையில் சுமந்து கொண்டு வெற்றி பெற வைக்கிறார்கள்.

Story first published: Monday, April 23, 2018, 12:52 [IST]
Other articles published on Apr 23, 2018
English summary
Rise of OLD players CSK into Best players CSK.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+