Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன் மோர் சிக்ஸ் அடிங்க.. தோனியிடம் கேட்ட சாக்ஷி.. ஆசையை நிறைவேற்றிய தல! - வீடியோ

Recommended Video

ஐபிஎல் 2018, மனைவி சாக்ஷியின் ஆசையை நிறைவேற்றிய தோனி

பெங்களூர்: நேற்று பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில் பரபரப்பாக நடந்த போட்டிக்கும் மத்தியிலும் மிகவும் அழகான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. தோனியிடம் அவரது மனைவி சாக்ஷி இன்னொரு சிக்ஸ் அடிக்கும் படி கேட்கும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

தோனி சிக்ஸ் அடிப்பதை பார்த்து அவர் துள்ளி குதித்து இருக்கிறார். நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது.

இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

தோனி அடித்த சிக்ஸ்

கடைசி இரண்டு ஓவரில் 31 ரன்கள் தேவை என்ற போது 19 வது ஓவரை முகமது சிராஜ் போட்டார். அதில் 5வது பந்தில் தோனி தேர்ட் மேன் திசையில் சிக்ஸ் அடித்தார். அதன்பின் வரிசையாக முகமது சிராஜ் மூன்று வைட் பந்துகள் போட்டு காமெடி செய்தார். இதனால் சென்னையின் வெற்றி எளிதானது.

இன்னொரு சிக்ஸ் கேட்டார்

இந்த சிக்ஸ் அடித்த போது, கேமரா தோனியின் மனைவி சாக்ஷி பக்கம் திரும்பியது. அப்போது சாக்ஷி சந்தோசத்தில் துள்ளி குதித்தார். அதோடு, ''ஒன் மோர் சிக்ஸ்'' என்று இன்னொரு சிக்ஸ் அடிக்கும்படி தோனியிடம் கேட்டார்.

மனைவி பேச்சு

இந்த வீடியோவை பெரிய திரையில் தோனி பார்த்தாரா என்று தெரியாது. ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைக்கும் போது அவர் அதை சிக்ஸாக மாற்றினார். டீப் மிட் விக்கெட் திசையில் அழகாக, வைட் யார்க்கார் பந்தை பறக்கவிட்டார்.

சூப்பர் பாஸ்

இந்த விஷயம் இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. இவர் ''இந்த போட்டியின் சிறந்த தருணம் இதுதான். மனைவி சாக்ஷி கேட்டபடியே கணவன் தோனி சிக்ஸ் அடித்து இருக்கிறார். அதை பெருமையாக சாக்ஷி பார்த்துக் கொண்டு இருக்கிறார்'' என்றுள்ளார்.

Story first published: Thursday, April 26, 2018, 14:37 [IST]
Other articles published on Apr 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+