பவுண்டரி லைனில் பறந்து சாகசம் செய்த டிரெண்ட் போல்ட் .. மிரண்ட கோஹ்லி.. ஐபிஎல்லின் சிறந்த கேட்ச்
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் அணி டெல்லிக்கு எதிராக நேற்று விளையாடிய போட்டியில் டிரெண்ட் போல்ட் பிடித்த கேட்ச் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
நேற்று பெங்களூரில் பெங்களூர் அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் பெங்களூர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. அதில் டிரெண்ட் போல்ட் பிடித்த கேட்ச் மிகவும் அதிக கவனம் ஈர்த்தது.
கோஹ்லி அதிரடி
இந்த போட்டியில் கோஹ்லி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 26 பந்துகள் பிடித்த அவர் 30 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம். கடைசியில் முக்கியமான நேரத்தில் ஹர்ஷல் பட்டேல் பந்தில், டிரெண்ட் போல்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சூப்பர் கேட்ச்
விராட் கோஹ்லி சிக்ஸ் அடிக்க முயன்ற சமயத்தில் அவுட் ஆனார். பவுண்டரில் லைனில் நின்ற போல்ட் வேகமாக பின்பக்கமாக ஓடிச்சென்று, அதை கஷ்டப்பட்டு, தரையில் விழுந்து ஒரு கையில் பிடித்தார். எல்லோரும் பவுண்டரில் லைனில் கால் பட கூடாது என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் தன்னுடைய முகம் படாமல் பார்த்துக் கொண்டார்.
வாவ்
இந்த கேட்ச் மிகவும் வைரல் ஆனது. பலரும் இப்படி ஒரு கேட்சா என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த 2018 ஐபிஎல் தொடரில், இதுவரை இதுதான் சிறந்த கேட்ச் என்று கூறப்படுகிறது. எப்போது அவுட் ஆனால் கோபப்படும் கோஹ்லியே, அந்த கேட்சை பார்த்து வாய் பிளந்தார்.
வாவ் என்ன இது
இந்த கேட்சை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ''அதை ஒரு கேட்ச் என்று நினைக்காதீர்கள். அது வேறு எதோ ஒன்று'' என்று மிகவும் ஆச்சரியத்தில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications