
கோஹ்லியும் ரோஹித்தும்
இந்த ஐபிஎல் போட்டியில் அதிர்ஷ்டம் இல்லாத இரண்டு கேப்டன்கள் என்றால் அது ரோஹித்தும், கோஹ்லியும்தான். உலகின் மிகவும் சிறந்த வீரர்கள் எல்லோரும் இந்த அணியில் இருக்கிறார்கள். ஆனாலும் இரண்டு அணியும் சரியாக வெற்றி பெற முடியவில்லை. மும்பை அணி நான்கு போட்டியில் ஒரு போட்டியில்தான் வெற்றிபெற்று இருக்கிறது. அதேபோல் பெங்களூர் அணியும் நான்கு போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கம்பீரும் ரஹானேவும்
இந்த ஐபிஎல் தொடரில் கொஞ்சம் மோசமான கேப்டன்சி செய்யும் வீரர்கள் என்றால் அது கம்பீரும் , ரஹானேவும்தான். கொல்கத்தா அணிக்காக கோப்பை வாங்கி கொடுத்த கம்பீரா இப்படி கேப்டன்சி செய்வது என்று எல்லோரும் வருத்தப்படும் அளவிற்கு அவரது டெல்லி கேப்டன்சி இருக்கிறது. அதேபோல் ரஹானே ஏன் கேப்டன் ஆனார் என்றே தெரியாத அளவிற்கு மோசமாக ஆடிக்கொண்டு இருக்கிறார். புள்ளி பட்டியலிலும் இரு அணிகளும் மோசமான நிலையில் இருக்கிறது.

அஸ்வின் கேப்டன்
அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, அவரை வைத்து எல்லோரும் கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது 3 போட்டிகளில், 1 போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பஞ்சாப் அணியை கொண்டு வந்துள்ளார். அஸ்வின் கேப்டன் ஆன பின் பேட்டிங், பீல்டிங்கிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். கோஹ்லி, டோணி, ரோஹித் போன்ற முக்கியமான கேப்டன்களுக்கு போட்டியாக அணியை வழிநடத்திக் கொண்டு உள்ளார்.

கேப்டன் டோணி
கேப்டன் டோணி, தல டோணி, பினிஷர் டோணி என பல அவதாரம் எடுக்கும் டோணி கேப்டன்சியில் சிஎஸ்கே வெற்றிபெறாத போட்டி கிடையாது. இதுவரை சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் அணியை வழிநடத்தி செல்கிறார். வயசானவங்க டீம் என்று சொன்னவர்களை கண்டுகொள்ளாமல், இப்போது சென்னையை கோப்பையை நோக்கி நகர்த்தி செல்கிறார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக்
இன்னொரு தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டன் ஆனதும் கூட ஆச்சர்யமான விஷயம்தான். தன்னுடைய அணியில் இருக்கும் வீரர்களை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இவருக்கு தெரிந்துள்ளது. சில முக்கியமான பேட்ஸ்மேன்களை கடைசி நேரத்தில் களமிறக்கி கடைசி நேர ரன் ரேட்டை அதிகப்படுத்துகிறார். ஆச்சர்யமாக புள்ளி பட்டியலில் கொல்கத்தாவை முதல் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

கேப்டன் கேன் வில்லியம்சன்
ஆனால் எல்லோரையும் முந்திக்கொண்டு முதல் இடத்தை பிடித்து இருப்பவர் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன். இதில் மிகவும் கடைசி நேரத்தில் கேப்டன் ஆனவர் என்றால் அது கேன் வில்லியம்சன்தான். ஒரு வாரத்தில் அணியின் பவுலிங் பலத்தை புரிந்து கொண்டு அதை வைத்தே அனைத்து போட்டிகளையும் வெற்றிபெற்றுள்ளார். இவர் இந்த அளவிற்கு கேப்டன்சியில் செயல்படுவார் என்று அணி நிர்வாகமே நினைக்கவில்லை.


Click it and Unblock the Notifications
