Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானே சரிவரமாட்டார்.. பாதி தொடரில் கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. புது கேப்டன் சரியா வருவாரா?

ஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரில் துவக்கம் முதல் எட்டு போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம். இது மிகவும் தாமதமான முடிவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை நியமித்துள்ளனர். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன என தெரிய வந்துள்ளது.

ஸ்மித் இல்லை

ஸ்மித் இல்லை

2018 ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்கவில்லை. பந்து சேத விவகாரத்தில் அவர் சிக்கியதால், ஐபிஎல் நிர்வாகம் வார்னர், ஸ்மித்தை ஐபிஎல் தொடரில் ஆட அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், ரஹானே ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் ராஜஸ்தான் அணி போராடி பிளே-ஆஃப் சென்றது.

ஸ்மித் வந்தார்

ஸ்மித் வந்தார்

ஸ்டீவ் ஸ்மித் 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது முடிவானது. எனினும், அவர் கேப்டன் பதவியில் அமர்த்தப்படவில்லை. கடந்த சீசனில் அணியை பிளே-ஆஃப் அழைத்துச் சென்ற கேப்டன் ரஹானேவை இந்த ஆண்டிலும் கேப்டனாக தொடரச் செய்தனர் ராஜஸ்தான் நிர்வாகிகள்.

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

ஆனால், ரஹானே தலைமையில் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 6 தோல்விகளை சந்தித்துள்ளது. கிட்டதட்ட பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியில்லாத சூழலில், ராஜஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

பெரிய பலன் இல்லை

பெரிய பலன் இல்லை

இப்போது கேப்டனை மாற்றியதில் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.

கேப்டனாக செயல்படுவாரா?

கேப்டனாக செயல்படுவாரா?

ஆஸ்திரேலிய வீரர்கள் மே முதல் வாரத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்க ஐபிஎல் தொடரில் இருந்து தங்கள் நாட்டுக்கு திரும்பிவிடுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் பதவியில் இருந்தாலும், 2019 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும், குறிப்பாக மே முதல் வாரத்திற்கு பின் உள்ள போட்டிகளுக்கும், அவரே கேப்டனாக செயல்படுவாரா என்பது தெரியவில்லை.

Story first published: Saturday, April 20, 2019, 17:28 [IST]
Other articles published on Apr 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+