அட இதுக்கு ஏலத்திற்கு போகாமலே இருக்கலாம்.. சாம்பியன் சிஎஸ்கேவிற்கு இந்த நிலைமையா?
ஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் சென்னை அணியிடம் மற்ற அணிகளை விட மிக குறைவான பணம் மட்டுமே கையில் உள்ளது.
ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான ஏலம் இன்று நடக்கிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 புதிய வீரர்கள் புதிய அணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
ஜெய்ப்பூரில் இந்த ஏலம் நடக்கிறது. 3.30 மணிக்கு தொடங்கும் ஏலம் 6.30 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை வீரர்கள்
இந்த 2019 ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள மொத்தம் 1003 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மொத்தம் 346 வீரர்களின் விண்ணப்பங்கள்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் 70 வீரர்கள்தான் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மிக அதிகம்
இதில் பஞ்சாப் அணிதான் அதிக பணத்தை மீதம் வைத்துள்ளது. பஞ்சாப் அணியிடம் 36.2 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணியால் இன்னும் 11 வீரர்களை எடுக்க முடியும். இதில் 4 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

குறைவான சென்னை
சென்னை அணிதான் இருப்பதிலேயே குறைவான பணம் வைத்துள்ளது. சென்னை அணியிடம் 8.4 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. சென்னை அணி இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் . வெளிநாட்டு வீரர்களை இந்த ஏலத்தில் சென்னை அணி எடுக்க முடியாது.

கஷ்டம்
இந்த புதிய ஏலத்தில் சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். சென்னை அணியிலும் இடதுகை பந்து வீச்சாளர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் சென்னை அணியால் இரண்டு பேரை மட்டுமே ஏலம் எடுக்க முடியும் என்பதால், பெரிய வீரர்கள் யாரையும் ஏலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications