Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தளபதிக்கு இடம் இல்லையா? யுவராஜை கைவிட்ட சிஎஸ்கே.. ரசிகர்கள் ஏமாற்றம்!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

12 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலம் இன்று நடக்கிறது. அடுத்த வருடம் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகள் எப்போதும் போல் மே மாதம் நடக்காமல், மார்ச் மாதத்திலேயே நடக்க இருக்கிறது.

மே மாதம் நடக்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக ஐபில் போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது.

யுவராஜ் எடுக்கப்பட்டார்

யுவராஜ் எடுக்கப்பட்டார்

சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்காக யுவராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த சீசனில் சரியாக ஆடவில்லை. 8 போட்டிகளில் ஆடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முடிந்தது

முடிந்தது

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவரை, பஞ்சாப் அணி, அணியில் இருந்து நீக்கியது. மாறாக அஸ்வின், கே எல் ராகுல் ஆகியோரை அணியில் தக்க வைத்தது. யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் நீக்கப்பட்டார்.

சென்னை அணி

சென்னை அணி

இந்த நிலையில் இந்த ஐபில் போட்டிக்காக இன்று நடக்கும் ஏலத்தில் அவர் பெயரும் ஏலம் விடப்பட்டது. அவரது குறைந்தபட்ச தொகை 1 கோடி ரூபாய் ஆகும். யுவராஜ் சிங்கை சென்னை அணி வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்தது.

சென்னை அணி கொடுத்த க்ளூ

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது க்ளூ ஒன்றும் கொடுத்துள்ளது. தளபதி படத்தின் பாடலை போட்டு சென்னை அணி ''உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறோம்'' என்பது போல பொருள்படும் வகையில் டிவிட் செய்துள்ளது.

எடுக்கவில்லை

எடுக்கவில்லை

ஆனால் யுவராஜ் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Story first published: Tuesday, December 18, 2018, 16:34 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+