வந்தா ராஜாவாதான் வருவேன்.. மோஹித் சர்மாவை அலேக்காக தூக்கிய சிஎஸ்கே!
ஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் மோஹித் சர்மா ரூ 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மோஹித் சர்மாவை சென்னை அணி ஏலம் எடுத்தது.
ஜெய்ப்பூரில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஏலம் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. 2019 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது நடந்து வருகிறது .

சென்னை அணிக்கு தேவை
சென்னைக்கு அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். இதனால் இந்த ஏலத்தில் சென்னை அணி வேகப்பந்து வீச்சாளரை அணியில் எடுக்கத்தான் முயற்சி எடுத்தது. தொடக்கத்தில் இருந்து அதற்காகத்தான் காத்து இருந்தது.

சென்னை முயற்சித்தது
இந்த நிலையில் சென்னை அணி முதலில் ஜெயதேவ் உனட்கட்டை அணியில் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் ராஜஸ்தான் அணி உனட்கட்டை அணியில் எடுத்தது. அதன்பின் முகமது ஷமியை சென்னை அணி எடுக்க முயற்சி செய்தது. ஆனால் அவர் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டார்.
கடைசியில்
இந்த நிலையில் தற்போது மோஹித் சர்மா ரூ 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மோஹித் சர்மாவை சென்னை அணி ஏலம் எடுத்தது. இவர் சென்னை அணியின் வேகப்பந்து தேவையை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் எவ்வளவு
சென்னை அணியிடம் ஏலத்திற்கு முன் 8.3 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையிடம் 3.3 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு வீரரை மட்டுமே சென்னை அணி ஏலத்தில் எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications