Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 36 போட்டிதான்.. ஐபிஎல் ஏலத்தில் 4.2 கோடி.. யார் இந்த குட்டி பையன் ஷிம்ரான்!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மேயர் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஜெய்ப்பூரில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஏலம் நடந்து வருகிறது. 2019 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது நடந்து வருகிறது .

கடும் போட்டி

கடும் போட்டி

ஐபிஎல் ஏலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிவீரர் ஷிம்ரான் ஹெட்மேயருக்கு கடும் போட்டி நிலவியது. ஷிம்ரானை ஏலம் எடுக்க பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் போட்டி போட்டது. பெங்களூர் அணியும் கடைசியில் போட்டியில் இணைந்தது.

யார் எடுத்தது

யார் எடுத்தது

ஐபிஎல் ஏலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மேயர் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஐபிஎல் ஏலத்தில் இவர் இவ்வளவு விலைக்கு எடுக்கப்படுவார் என்று யாரும் நினைக்கவில்லை.

யார் இவர்

யார் இவர்

இவர் கயானாவில் பிறந்தவர். இவர் குடும்பமே கிரிக்கெட் குடும்பம் ஆகும். இவர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அணிக்காக விளையாடி வந்தவர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இவர் மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகள், 20 ஒருநாள் போட்டிகள், 6 டி-20 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். ஆனால் மேற்கு இந்திய தீவுகள் 19 வயதினர் அணி உலகக் கோப்பை வென்ற போது அந்த அணிக்கு இவர்தான் கேப்டனாக இருந்தார். அதனால்தான் இவரை அணிகள் போட்டி போட்டு வாங்கியுள்ளது.

Story first published: Tuesday, December 18, 2018, 16:31 [IST]
Other articles published on Dec 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+