Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது.. தேர்தலை சமாளிக்க வங்கதேசத்துக்கு போகிறதா ஐபிஎல்? மெய்யாலுமா?

மும்பை : 2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் போட்டிகள், இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கும் தேதிகளில் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது என ஒரு வதந்தி பரவி வருகிறது.

முன்னதாக ஐபிஎல் தொடர் பொதுத் தேர்தல் நடக்கும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. ஐபிஎல் தொடரின் தேதி மாற்றப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் கூறியது பிசிசிஐ.

புதிய வதந்தி

புதிய வதந்தி

இந்த நிலையில், பிசிசிஐ அட்டவணை வெளியாவதில் இருக்கும் தாமதத்தை பயன்படுத்தி ஐபிஎல் 2019 தொடர் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. அதில் முக்கியமாக ஐபிஎல் 2019 தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது.

இந்தியாவில் தான் நடைபெறும்

இந்தியாவில் தான் நடைபெறும்

கடந்த மாதம் வரை ஐபிஎல் தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என்ற கேள்வி இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ, ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவில் தான் நடைபெறும். தேர்தலுக்கு ஏற்ப அட்டவணையில் மாற்றம் செய்யப்படும். மேலும், கூடுதல் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படும் என கூறி இருந்தது.

வங்கதேசத்தில் ஐபிஎல்?

வங்கதேசத்தில் ஐபிஎல்?

இதற்கு மாறாக தற்போது தேர்தலை சமாளிக்க சில ஐபிஎல் போட்டிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் நடத்தப்படும் என வதந்தி பரவி வருகிறது. தற்போது வங்கதேசத்தில் அந்த நாட்டின் டி20 தொடரான பங்களாதேஷ் பிரீமியர் லீக் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஆனால், இந்த செய்தி எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. பிசிசிஐ இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், போட்டிகளை வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றால் ஆகும் அதிகப்படியான செலவுகள் தான்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

பிசிசிஐ அறிவிப்புக்கு முன் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா அல்லது இங்கிலாந்தில் நடைபெறலாம் என கூறப்பட்டு வந்தது. மேற்கூறிய நாடுகளில் சில போட்டிகள் நடைபெறும் என கூறினால் கூட அது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்பது வதந்தியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

Story first published: Wednesday, February 6, 2019, 15:44 [IST]
Other articles published on Feb 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+