Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பா.. அவர் மறுபடி வந்துட்டாரு.. மும்பை இந்தியன்ஸ் நிம்மதி!! பும்ராவும் நிறைய கத்துக்கலாம்!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக அனுபவம் வாய்ந்த லசித் மலிங்கா மற்றும் இளம் வீரர் பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

மலிங்கா மீண்டும் வந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி நிம்மதி அடைத்துள்ளது, பும்ராவுக்கும் அது பயன்படும். இருவரும் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் தான் என்கிறார் ஜாகிர் கான்.

பந்துவீச்சு ஆலோசகர்

பந்துவீச்சு ஆலோசகர்

துவக்க காலத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த மலிங்காவை, கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுக்கவில்லை. எனினும், அந்த அணி அவரை பந்துவீச்சு ஆலோசகராக நியமித்தது.

பலம் சேர்க்கும்

பலம் சேர்க்கும்

2019 ஐபிஎல் ஏலத்தில் மலிங்காவை அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது மும்பை அணி. அவர் மீண்டும் அணிக்கு பந்துவீச்சாளராக திரும்பி இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என்கிறார் ஜாகிர் கான்.

அனுபவம்

அனுபவம்

அவர் இருப்பது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிற பந்துவீச்சாளர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும். மலிங்காவின் அனுபவம் அப்படி என கூறுகிறார் ஜாகிர் கான். மலிங்கா தற்போது இலங்கை அணியின் கேப்டனாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ரா - மலிங்கா

பும்ரா - மலிங்கா

மேலும், இந்திய அணியின் இளம் புயல் பும்ரா, மலிங்காவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறார். கிட்டதட்ட அவரை தான் பின்பற்றுகிறார் பும்ரா. இருவரும் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் எனவும் ஜாகிர் கான் கூறினார். பும்ரா - மலிங்கா இருவரின் பந்துவீச்சு முறை மாறுபட்டாலும், இருவருமே தனித்துவமான பந்துவீச்சை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 21, 2019, 17:12 [IST]
Other articles published on Mar 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+