Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது.. இவர் அடுத்த கோலியா? கிறிஸ் கெயில் நல்லா யோசிச்சு தான் பேசறீங்களா?

ஹைதராபாத் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் கே எல் ராகுல் ஆடி வருகின்றனர்.

கிறிஸ் கெயில், சக வீரர் ராகுலை பற்றி பேசிய போது கோலியுடன் ஒப்பிட்டு கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்துள்ளார். ஆனால், அவரது கருத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.

அடுத்த கோலி

அடுத்த கோலி

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கெயில், கோலி குறித்து பேசி வந்த போது, "கே எல் ராகுல் தான் நினைவுக்கு வருகிறார். அவர் விராட் போல நன்றாக ஆடுவார். விராட்-க்கு அடுத்து ராகுல் தான்" எனக் கூறினார்.

கொஞ்சம் ஓவர்

கொஞ்சம் ஓவர்

ஐபிஎல் தொடரில் ராகுல் எதிர்பார்த்ததை விட பல மடங்கு சிறப்பாக ஆடி வருகிறார். போட்டிக்கு போட்டி ரன் குவித்து, அரைசதங்கள், சதம் அடித்து தன் திறமையை நிரூபித்துள்ளார். ஆனால், அடுத்த கோலி என்பதெல்லாம் இப்போதைக்கு கொஞ்சம் ஓவர் தான்.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

காரணம், கடந்த சில மாதங்கள் முன்பு வரை முழு பார்ம் அவுட்டில் இருந்தார் ராகுல். இருந்தும் இவருக்கு அணியில் தொடர்ந்து இடம் கொடுக்கப்பட்டு வந்தது. அப்போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இவரை அணியில் இருந்து தூக்க வேண்டும் என கூறினர்.

தொடர்ந்தால்..

தொடர்ந்தால்..

இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் ஒரீரு போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மீண்டும் தன் பார்மை மீட்டு பொறுப்பாக ஆடி வருகிறார். இது தொடரும் பட்சத்தில் அடுத்த கோலி ஆவாரா? இல்லையா? என பார்க்கலாம்.

Story first published: Monday, April 29, 2019, 21:57 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+