Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் 3டி வீரர்னா.. அம்பதி ராயுடு 4டி வீரர்.. விஜய் ஷங்கரை கலாய்க்கும் ரசிகர்கள்! எதுக்கு தெரியுமா?

Recommended Video

தேர்வுக்குழுவை கலாய்க்கும் ரசிகர்கள்! எதுக்கு தெரியுமா?

சென்னை : மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை செய்யப்போவது யார் என்ற கேள்வி இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அம்பதி ராயுடு விக்கெட் கீப்பிங் செய்தார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இதை காரணமாக வைத்து விஜய் ஷங்கர் மற்றும் இந்திய அணித் தேர்வுக் குழுவை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். ராயுடு விக்கெட் கீப்பிங் செய்வதற்கும், விஜய் ஷங்கரை கலாய்ப்பதற்கும் என்ன சம்பந்தம்?

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மிகச் சில போட்டிகளே ஆடி இருந்த விஜய் ஷங்கர் அணியில் வாய்ப்பு பெற்றார்.

முப்பரிமான வீரர்

முப்பரிமான வீரர்

இது குறித்து விளக்கமளித்த இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் பிரசாத், விஜய் ஷங்கர் முப்பரிமான வீரர் (3D) என குறிப்பிட்டார். அதாவது பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என மூன்று விஷயங்களில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நோக்கில் அவரை தேர்வு செய்ததாக குறிப்பிட்டார்.

3D கண்ணாடி

3D கண்ணாடி

அம்பதி ராயுடு இதை கிண்டலடித்து, தான் 3D கண்ணாடி வாங்கி உலகக்கோப்பை தொடரை பார்க்கப்போவதாக கூறினார். இதனால், இந்த விவகாரம் பெரிதானது. பிசிசிஐ வரை இந்த விஷயம் சென்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4D வீரர்

4D வீரர்

தற்போது அம்பதி ராயுடு சென்னை அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்து வருவதால், அவர் 4D வீரர் என ரசிகர்கள் குறிப்பிட்டு, 3D வீரர் விஜய் ஷங்கரையும், அந்த பட்டத்தை கொடுத்த தேர்வுக் குழுவையும் கலாய்த்து வருகின்றனர்.

நான்கு பணிகள்

நான்கு பணிகள்

அதாவது, அம்பதி ராயுடு பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு மற்றும் விக்கெட் கீப்பிங் என கிரிக்கெட்டில் நான்கு பணிகளை செய்வார் என கூறி வருகின்றனர். அம்பதி ராயுடுவின் பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பாக இருப்பதாகக் கூறி ஐசிசி அவர் பந்துவீச தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 26, 2019, 22:32 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+